Friday, August 17, 2012

சிட்டுக்குருவி தப்பியது  
House Sparrow (Passer domesticus)

அந்த நாள் மவுனவிரதம். மாடி 'சிட்அவுட்'டில் நின்றிருந்தேன். மணி இரண்டிருக்கும். பசியோடு இருந்தேன். முயல் பிடிப்பவன் தெருவில் முதுகுத்தூளியில் தொங்கவிட்ட குழந்தையோடு வந்தான். கையில் உண்டிவில். வீட்டிற்கு எதிரே உள்ள வேப்பமரத்தில் ஒரு குருவி உட்கார்ந்திருந்தது. குருவியை குறி வைத்தான்.மவுனத்தில் இருந்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கை தட்டினேன். ‘குருவி என்றான்.நான் ‘வேண்டாம் எனக்கையாட்டினேன். அவன் வெறுப்போடு போனான். குருவி தப்பியது. இரண்டு நிமிடம் கழித்து எனக்கு உறைத்தது. அவனுக்கும், அவனது குழந்தைக்கும் பசி, எனக்கும் பசி. பசி யாவருக்கும் ஒன்று தான். முயல் பிடிப்பவனுக்கு பத்து ரூபாயாவது கொடுத்திருக்கலாம். அதற்குள் தெருமுனைக்குப்போய்விட்டான். மீண்டும் கைதட்டினேன். அவன் திரும்பி வந்தான். அவனிடம் பத்து ரூபாய் கொடுக்க, அவன் அதை குழந்தையிடம் கொடுத்து மகிழ்ந்தான்.எனக்கும் குருவி தப்பியதில் மகிழ்ச்சி.

4 comments:

  1. வணக்கம் ஐயா.

    நலம், நலமறிய ஆவல்.

    கோயம்பத்தூர் நண்பர் திரு வின்சென்ட் பவுல்ராஜ் அவர்கள் மூலமாக முகநூளில் தங்களின் பதிவை பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு பறவைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் அதன் விபரங்கள் ஒன்றும் தெரியாது.

    நான் பிறந்து, வளர்ந்து, வசிப்பது எல்லாமே பம்பாய் தான். வயது நாற்பத்தி ஐந்து. ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் கணக்காளர் - நிதி அதிகாரியாக பணி புரிந்து கொண்டிருக்கிறேன். தங்களிடம் பேச ஆசை படுகிறேன். தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் தங்களின் கைபேசி எண்ணை என் கைபேசி எண்ணிற்கு அனுப்ப முடியுமா. நன்றி, வணக்கம்.


    மரியாதையுடன்,
    வீ. முருகேசன்.
    09833776818.

    ReplyDelete
    Replies

    1. Dear Visitor,

      Thanks for encouragement. I messaged my mobile number as you like.

      Delete