Wednesday, June 26, 2013


யாத்திரையில் காணுயிர்  TRAVEL- wild life




ஹனுமார் லாங்கூர் (Hanumar longur)

இந்த இனக்குரங்கை விசாகப்பட்டிணம் விரைவு ரயிலில் வரும் போது காலை வேளையில் அறுவடை செய்த நெல் வயிலில் பாய்ந்து ஓடியது என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பிறகு புவனேஷ்வரில் உள்ள கந்தகிரி ஜைனத்துறவிகள் குகை வளாகத்துக்குள் பார்த்தேன். இவை பெண் வாங்கூரிடம் சிலசமயம் சண்டையிட்டு குட்டிக்குரங்கைப்பிடுங்கிக்கொன்று விடும்.






நண்பர் வஜ்ரவேலு வின்டர் ஸ்கேட்டுடன்-கொனார்க்


வின்டர் ஸ்கேட் (Winter skate)

கோனார்க் கடற்கரையில் ஒரு மீனவ இளைஞன் இந்த வகை மீனைப்பிடித்து கரையில் கிடத்தியிருந்தான். அவன் நீண்ட மெலிதான கம்பியை கடலுக்குள் கரையிலிருந்தே 200 அடிக்கு விசிறிவிட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தான்.இது அழிந்து வரும் இனம். மனிதன் அளவுக்கதிகமாக பிடித்ததாலும்,  வின்டர் ஸ்கேட் முட்டையிடுவது குறைவு மேலும் குஞ்சு பொரிக்க இரண்டு வருஷங்கள் ஆகும்(endangered species) . இது எப்படி இந்த மீனவக் குப்பத்து இளைஞனுக்கு மாட்டியது என வியப்பாக இருந்தது.



எரவாடி டால்பின்(Erravaddy Dolphin)

சிலிக்கா லேக் (Chilika lake) கில் படகில் சென்ற போது
எரவாடி டால்பின்களைப்பார்த்தேன். இவை திமிங்கலத்துக்கு உறவு.
அது போல நீரை உமிலும்.இது கடலும் ஆறும் கலக்கும் இடங்களில்
காணலாம். மீனவர், மீன்களைத்தங்கள் வலையில் விழலைக்க
எரவாடி டால்பின்களை அதன் குரலில் ஒலித்துக் கூப்பிட, அவை வர,
மீன்கள் வலைக்குள்ளே வீழும். இவைகளைப்பழக்கி கண்காட்சி 
நடத்துவர். இவை critically endangered species.


Friday, June 21, 2013

பொரி மைனா (கொனார்க்)
மின் கம்பத்தில் பொரி மைனா கூடு (கொனார்க்) 
                                                 TRAVEL 

புரி, தேர் வீதியில் காளை 

Pond Heron collects nest material in a tree (Puri)


யாத்திரையில் காணுயிர்
   இந்தியகிழக்குக்கடற்கரை ஓரமாக யாத்திரையின் போது   
   நான் பார்த்த பறவைகள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் பொரி மைனா மற்றும் பிணந்திண்ணிக்கழுகு பற்றிச்சொல்லலாம். விசாகப்பட்டிணம் விரைவு ரயிலில் சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம் சென்ற போது ரயில் இரவு முழுக்க ஓடி, காலை விடிந்து ஆந்திரப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு சிறிய நீர் நிலையோரம் மூன்று பிணந்திண்ணிக்கழுகுகள் (Vulture) உட்கார்திருந்த்தைப்பார்த்தேன். என்ன வகைக் கழுகு என்று ரயில் வேகத்தில் தெரியவில்லை. ஆந்திரா, ஒடிசாவில் பொரி மைனா நிறையக்கண்ணில் பட்டது. கோனார்க் கோவிலிலிருந்து வெளியில் வந்த போது மின்கம்பத்தின் மேல் பொரி மைனா கூடு வைத்திருந்ததைப்பார்த்தேன். ஜோடி மைனா அமர்ந்திருந்தது.அதிகமான கூட்டுப்பொருட்கள் காணப்பட்டது. இலைகள், தாவரக்குச்சிகள், புல், குப்பைகூளம் என ஒழுங்கற்ற உருண்டையில் இருந்தது. 15 to 25 அடி உயரத்தில் மரத்தில் ஒரு கூடு பார்த்தேன். Sturnus sordidus என்ற வகை பொரி மைனா சிறு வண்ண மாறுபாட்டில் இந்த வடகிழக்குப்பகுதியில் இருக்கும் என Dr. சலிம்அலி சொல்கிறார். சேறு, ஈரம், குப்பைகூளம், புல்வெளி இதற்கு பிடித்தமான பகுதிகள். நம்மூர் மைனா(Indian Myna) இந்தப்பகுதியில் உள்ளது. அதிகளவில் குரல் எழுப்புகிறது. பறக்கும் பொழுது அடிவயிறு வெள்ளையாகத்தெரிகிறது.
            முகம் கருப்பும், நீண்டவாலும் கொண்ட பெரியகுரங்கு ஒன்று ரயில் ஆந்திர எல்லையில் ஓடிக்கொண்டிருக்கும் போது காலை வேளையில் அறுவடை செய்த வயல் வெளியில் வேகமாக ஓடியதைப்பார்த்தேன். அந்த வகை குரங்கு மற்றொன்றை புவனேஷ்வர் கந்தகிரியில் பார்த்தேன்.
            ஒடிசா, புரியில் தேர் வீதி உலவும் காளைகள் குட்டையாக இருந்து வியப்பை ஊட்டின. தென்மேற்குப்பருவ மழை ஆரம்பித்து விட்டதால் பறவைகள் இனப்பெருக்கத்தைத்தொடங்கிவிட்டன. புரி Golden Beach பகுதியில் தங்கியிருந்தோம். அங்குள்ள மரங்களில் காகம், குருட்டுக்கொக்கு கூடுகள் பார்த்தேன். எங்கு சென்றாலும் நம்மைச்சுற்றியுள்ள காணுயிர்களைக்கண்டு ரசிக்க வேண்டும்.

Tuesday, June 18, 2013

TRAVEL


 போரா குகை நுழைவாயிலில்  நண்பர் வஜ்ரவேலு









குகைக்கு மேல் சிற்றாறு




Bora caves-
யாத்திரை
போரா குகைகள்
                       
குகைகளில் விலங்குகள் தங்கும். தவம் மேற்கொள்ளும் ரிஷிகள், ஜைனத்துறவிகள் குகைகளில் தங்குவர். குகைகளுக்குள் வொளவால்கள் கூரைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். அதன் நாற்றம் மேலும் கீச்,கீச் ஒலியை வைத்துத்தெரிந்து கொள்ளலாம். குகைகள் குளிர்ச்சியாக இருக்கும். ஏனெனில் நீர் பாறையிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும். நீரில் உள்ள humic acid பாறையிலிருக்கும் கால்சியம் கார்பனேட்-டுடன் கிரியை நடத்தி,ஆயிரக்கணக்கான வருஷங்கள் தாதுஉப்புகள் கலந்து வரும் மலைச்சிற்றாரு இந்த போரா குகைகளை செதுக்கியுள்ளது. இங்கு ஆழத்தில் சிவலிங்கம் உள்ளதால் சிவராத்திரி அன்று இரவு அக்கம் பக்கத்து மலைவாசிகளின் குழு நடனம், பாட்டு, தாளம் விடியல் வரை நடக்கும். குகைக்கு மேற்புறம் ரயில் இருப்புப்பாதை ஒன்று செல்கிறது. விசாகப்பட்டிணத்திலிருந்து 90 கி.மீ வடக்கே உள்ளது.கிழக்குத்தொடர்ச்சி மலையில் 800 – 1300 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

வில்லியம் எனற ஆங்கிலேய புவியியல் நிபுணர் 1807-ல் இந்த குகையைக்கண்டு பிடித்தார். கால்சியம் பை கார்பனேட் குகை தாதுகளோடு கைகோர்த்து குகைக்குள் சிற்பங்கள் வடித்தது போல் இருக்கின்றன. இவை பார்ப்பவர் மனக்கற்பனை ஓட்டத்துக்குத்தக்கவாறு தெரியும். சிவபார்வதி, தாய்சேய், ரிஷிதாடி, புலி, பசு, முதலை எனப்பார்ப்பவர் கற்பனைக்குத்தக்கவாறு இந்த குகை சுவர்களிலிருந்து துருத்திக்கொண்டிருக்கும் stalagmites தோன்றும். வால் போல் தொங்கும் அமைப்புகள் stalactites ஆகும். 200 மீ தூரக்குகை. நாம் உள்ளே(trekking) நடப்பது 320 மீ. இந்த குகை ஆளை மிரட்டும் பெரிய குகை.வியப்பை ஊட்டக்கூடியது. இயற்கையின் கைவண்ணம்.


இது பற்றி சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம் ரயில் சினேகிதர் சொல்லித்தான் எங்கள் நிரலில் சேர்ந்தது.கோஸ்தானி ஆறு இங்குள்ள பள்ளத்தாக்கை வளப்படுத்துகிறது. 30000-50000 வருஷங்களுக்கு பழமையான பழங்குடியினர் வாழ்ந்ததற்கு அடையாளமாக, இங்கு ஆந்திர பல்கலை ஆராய்ச்சியில் பல கல்ஆயுதங்கள் கிடைத்துள்ளன. 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.இந்த குகையில் நடந்து கண்ணுற்றது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம்.

Friday, June 14, 2013


ரிஷி கொன்டா கடற்கரை,விசாகப்பட்டிணம்
Travel

யாத்திரை  







ரிஷி கொன்டா கடற்கரை,விசாகப்பட்டிணம்
ராஜாராணி கோவில், புவனேஷ்வர்


            சென்ற நாட்களில் மூவாயிரம் மைல்கள் கிழக்குக்கடற்கரை ஓரமாக யாத்திரை போனேன்விசாகப்பட்டிணம் மிகத்துரித ரயில்கோனார்க் விரைவு ரயில்மற்றும் கோரமண்டல் விரைவு ரயில் யாத்திரைக்கு உதவினநடந்துசைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷாகார்,பேருந்துசிற்றுந்துபடகுஎன நானும் நண்பரும் நகர்ந்து கொண்டே இருந்தோம்அந்தக்கால முனிவர்களும்சித்தர்களும்புத்தபிக்குகளும்ஜைனத்துறவிளும்சாதுக்களும் இப்படித்தான் காடு,மலை, கடற்கரைகிராமம்நகரம்என நகர்ந்து கிடைப்பதை உண்டு, போய்க்கொண்டே இருப்பார்கள்அவர்களுக்கென்ற நிரந்திர இருப்பிடம் இல்லைநானும் நண்பர் வஜ்ரவேலுவும் இருவேளை மட்டும் உண்டுசில வேளை ரொட்டித்துண்டுகள்கனிகளோடு பசியாற்றிநிறைய நடந்தோம்சில வேளைகளில் ஐந்து மைல் கூட நடப்போம்இயற்கையோடு கலந்திருந்தோம்கடற்கரைகளில் மணல்உப்புகாற்றுநீலவானம்ஓம் என்று ஒலித்து வந்த அலைகளுடன் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை வியந்திருந்தோம்.வங்காள விரிகுடா சமுத்திரத்தின் Classic beach, சில்க்கா ஏரி, Golden beach,புரி, Rishikonda beach, RK beach, விசாகப்பட்டிணம்,   என சுற்றித்திரிந்தோம்.


விசாகப்பட்டிணத்தில் ஒரு நாள்கோனார்க்கில் ஒரு நாள்புரியில் இரு நாள்ரயிலில் இரு நாள் என ஆன்மா பயணத்திலேயே இருந்ததுஅருகில் சொந்தம்நண்பர் குழாம்இல்லைமுற்றிலும் தெரியாத பாஷைமுகங்கள்பிரதேசம்சீதோஷ்ணம்உணவு என இருந்தாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என மனதை சமனப்படுத்திசில உடல் உபாதைகள்நித்திரை அசொளகரியங்கள் பொறுத்து யாத்திரை மேற்கொள்வது ஆன்மாவை பதப்படுத்தும்வீட்டைப்போல் வசதிகள் எதிர் பார்ப்பதும்அது இல்லாது போகும் போது கவலைஎரிச்சல்கோபம்சந்தோஷமின்மை வரக்கூடாதுஎந்த அசொளகரியங்களிலும் குதாகலமாக இருக்கப்பழகுதல் ஆன்மாவுக்கும்மனதுக்கும் பயிற்சிஉடலை வருத்தி யாத்திரை செல்வது அந்தக்காலத்தில் நிகழ்த்தப்பட்டதுபசியை எப்போதும் உணர்ந்திர்ந்தனர்உணவு கிடைக்கும் போது உண்டனர்பசியறியாத யோகிக்கு யோகம் கைகூடாது.


 ஆதி சங்கரா இந்த மாதிரி ஊர்திவசதிவாய்ப்புகள் இல்லாத போது நான்கு முறை காலடிகேரளாவிலிருந்து இமயம் நடந்தே சென்றிருக்கிறார் என்றால் அவரது மன வலிமை எண்ணிப்பார்க்க வேண்டும்அப்போது காடுகளும்விலங்குகளும்விஷஜந்துக்களும்புயல்மழைபாலமில்லா ஆறுகள்கரடு முரடான பாதைகள்உயர்ந்த மலைகள்குளிர் என எப்படி வாட்டி எடுத்திருக்கும்அப்பர்இமயமலை சென்ற போது கால்களும்கைகளும் கிழிந்து இரத்தம் சொட்டினஅவர்களை விட நாம் இப்போது வாழும் வாழ்க்கை சொகுசு மயமானதுஇருந்தும் நாம் சலிப்புஎரிச்சல்மனவருத்தம் கொள்கிறோம்ஏன்இப்போதிருப்பது போல அப்போது வசதிவாய்ப்புகள் இல்லைஇருந்தும் நாம் நம் முன்னோரை விட சந்தோஷத்தில் இல்லைஏன்எதையோ எதிர் பார்த்துக்காத்திருக்கிறோம்திருப்தியற்ற மனநிலையில் உள்ளோம்.ஏன்எவனொருவன் மனதளவில் திருப்தியோடு இயற்கைக்கு நன்றி பகர்ந்து கிடைப்பதை உண்டுபிறரோடு பகிர்ந்து வாழ்கிறானோ அவனே செல்வந்தன்.






 ராஜாராணி கோவில் நடனமாதர்