Sunday, November 24, 2013

காந்தள் மலர்--- Water snow flat வண்ணத்துப்பூச்சி 


Photo courtesy my dear friend Mr. Ramachandramurthy


காந்தள் மலர்--- Water snow flat
(Gloriosa superba) (Tagiades litigiosa Moschler)
                வண்ணத்துப்பூச்சிகளுக்கு தமிழ் பெயர் வைக்க யாராவது முன் வந்தால் நான் உதவத் தயார். கோவையைச்சுற்றி அதாவது சிறுவாணி, வாளையார் பகுதியில் மட்டுமே நூறு விதமான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன . அதை பதிவு செய்துள்ளேன் என்று மூத்த நண்பர் ராமச்சந்திர மூர்த்தி என்னிடம் சொன்னார். Butter flies of Coimbatore surroundings பற்றி யாராவது அடையாள நூல் தமிழில் எழுதி வெளிட்டு தங்கள் பெயரை மனித சரித்திரத்தில்  பதிவு செய்யலாமே! வெறுமனே புகைப்படம் எடுத்து Like வாங்கி முகநூல் ஸ்டோர் அறையில் பூட்டி வைத்து யாது பயன்?வரும் சந்ததி பயனடையுமா? இயற்கையை நோக்கி அவர்களை திருப்புதல் எங்ஙனம், தோழர்களே? சரி! விஷயத்திற்கு வருக!
             
Water snow flat
இந்தப் புகைப்படம் நண்பர் ராமச்சந்திர மூர்த்தி வாளையாறில் எடுத்தது. 2000 metre உயரம் வரையுள்ள மலைப்பிரதேசங்களில் இந்த அழகான வண்ணத்துப்பூச்சியைப்பார்க்கலாம். Skippers குடும்பத்தைச்சார்ந்தது. ஸ்கிப்பர் என்றாலே வேகமாகவும், குதித்தும் பறப்பது என அர்த்தம். அதனால் இப்பெயர் வந்தது. Moth அல்லது இது வண்ணைப்பூச்சியா எனும் அளவு குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணத்துப்பூச்சி இனம். இது இறகுகளை கிடை மட்டத்திலும், சில உயரவாக்கிலும் வைத்து அமரக்கூடியது. சூர்ய குளியல் இலைக்கு அடியில் அமர்ந்து எடுக்கும். அதிகமாக பறவை எச்சத்தில் அமரும். மலருக்கும், ஈரமான பகுதிக்கும் வருகை புரியும்.. தனக்கென ஒரு பிரதேசத்தை வைத்துக்கொள்ளும். சின்ன உலா போய் மீண்டும் அதே இடம் அமரும். ஒரு சில பருவத்தில் இமயத்தில் பறந்து உலவும்.

காந்தள் மலர்

          Water snow flat வண்ணத்துப்பூச்சி அமர்ந்திருப்பது, சங்க இலக்கியங்களில் பெருமளவு பாடல் பெற்ற அழகான செங்காந்தள் மலர்.  இதன் வண்ணம் மயக்குவதாக உள்ளது. இதற்கு வாசனையில்லை. ஆனால் அதன் சிகப்பு நிறமும், திசைக்கொன்றான மகரந்தக்கேசரங்களும் மிக அழகு. இந்த மலரை முதன்முதலாக கரிமுட்டி, காடம்பாறை மலைமக்கள் வாழிடப்பகுதி, அதாவது வாண்டல் அணை Trekking (பார்க்க; வெளியிட இருக்கும் மலைமுகடு(Trekking) நூலில்)செல்கையில் கைக்கு எட்டியதைப்பறித்தேன். கொடியில் பூக்கும்.  எனது தோழி செங்காந்தள் மலரைப்பறித்து தன் கூந்தலில் சூடிக்கொண்டது வினோதமாக இருந்தது. இந்த மலரை பெண்ணின் விரலுக்கு உவமை கூறும் சங்க காலத்திய செய்யுள்கள் ஏராளம்.(சங்க காலம்; கி.மு-லிருந்து 3-ம் நூற்றாண்டு வரை) பிறகு இந்த மலர் கோவை ஆச்சான் குள ஏரிமேட்டில் கண்ணில் பட்டது. புகைப்படம் எடுத்தேன். இதன் விதை ஏற்றுமதி செய்கிறார்களாம். கண்ணுக்கு நல்லது என கிராம மக்கள் சொல்கின்றனர்.ஏற்றுமதி செய்த விதைகளிலிருந்து கண்சொட்டு மருந்து தயாராகி வருகிறதாம். இதை இந்தியாவில் யாராவது முயற்சித்தார்களா!

 காந்தள் மலருக்கே ஒரு நூலைப்படைக்கலாம். அப்படி பாராட்டுகள் வாங்கும் மலர். இதோ;-
‘செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்’ – சிறுபாணாற்றுப்படை
வளமையான கொத்துகளாக, பெண்ணின் கை விரல்களாகவே பூத்தன.

ஒண்செங்காந்தள்’- குறிஞ்சிப்பாட்டு
இயற்கை அழகோடு கூடிய செங்காந்தல் மலர்.

முளிதளிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’- குறுந்தொகை
மிருது தோய்ந்த அழுத்திய காந்தள் மலர், அழகான பெண்ணின் கை விரல்கள்.

 Migration of Birds talk delivered with power point presentation before Royals Rotarians, Pollachi Bharathiya vidhya mandhir School.

Sukumar(Chinna Sathan) Author of Diary on the nesting behaviour of Indian Birds receiving bouquet from Mr. Senthil Kumar Kalingarayan, BVB School Correspondence, Chartered Engineer, Mr. Karthikeyan, Bank Manager, Dhanalakhsmi Bank and Mr. Sivakumar, GM Sakthi Soyas were looking on. Mr. K.P. Dhanabalakrishnan, President of Club, Civil Engg., HOD, Eswar College has arranged this function.  










           

            

Monday, November 18, 2013

Giant wood Spider                   Wonders in Nature
(Nephila- family)

            

Dress made up of Giant wood Spider web filaments- exhibited in London Victoria museum 

male Spider less than 5 cm seen on 4" female Spider

      இந்த சிலந்தியை நான் ஆனைகட்டி தாண்டி, உள்ள ஜல்லிப்பாறையில் பாதையோரமாக, வலையில் சிலவற்றைப்பார்த்தேன். முந்திய இரவு மழை பெய்த ஈரம் இருந்தது. மறுநாள் காலை அடர்த்தியான வெண்பனி போலார் கரடிகள் போல மலைப்பள்ளத்தாக்குகளில் நகர்ந்து போய்க்கொண்டிருந்தன. ஜில் காற்று, விரல்களை பாண்ட் பாக்கெட்டுக்குள் திணிக்கச்சொன்னது. இந்த மாதிரி சிலந்தி பலவற்றை இப்போது சந்தித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம் ஏனெனில் இதன் பரிமாணம். வலை முழு வட்டமே 2 மீ இருக்கும். நடுவில் 4 அங்குலம் அளவிலான பல வண்ண நிறத்தில் ஒரு சிலந்தி அமர்ந்திருந்தது. அதன் வலை கெட்டியாக இருந்தது. அளவான காற்றிலும், மழையிலும் தாங்கும். வலை நின்ற வண்ணத்தில் அருகிலிருந்த மரத்தில் ஒட்டிச்சுற்றியிருந்தது. (verticle and elliptical) இது பறந்து வரும் வண்ணத்துப்பூச்சி, பறக்கும் மற்றும் துள்ளித்தாண்டும் பூச்சிகள் அதன் வலைவிரித்த பாதையில் வந்தால் சிறைபட்டு சிலந்திக்கு உணவாக வேண்டியது தான். சின்னப்பறவை அறியாமல் பறந்து வந்து மோதினால்  வலையை கலைத்துத்தப்பிவிடும். வலை ஆரத்துக்குள் ஒருசில இறந்து  பட்ட ஜிவன் கழிவு, வண்ணத்துப்பூச்சியின் சிறகை விட்டுவைப்பது, சின்னப்பறவைக்குவலையிருக்கு பாத்து வாப்பாஎன சிலந்தி எச்சரிக்கை செய்கிறது.
இன்னொரு அதிசயம், என்னை வியக்க வைத்தது போல உங்களையும் வியக்க வைக்கவேண்டுமென்றே, இதைப்பகிர்ந்து கொள்ளவிருப்பம். ஆண் சிலந்தி 5 செ.மி.க்கு மேல் இல்லை. பெண் 4 அங்குலம் ஆனால் ஆண் 5 செ.மீ. நெட்டை மனுஷியும் சித்க்குள்ளனுக்கும் ஜோடி வைத்த இறைவன் ஒரு தீராதவிளையாட்டுப்பிள்ளை தான். 2 மீ வலைப்பரப்பில் ஆண் 1 () 4 () 5 இருக்கலாம். இவை  பெண் பிடித்த இரையைத்திருடி, மிச்ச மீதியைத்திண்ணும். தனது கெட்டநேரத்தில், விபத்தாக மாட்டிய உயிரியின்  உடலில் Neurotoxin ஏற்றி அதை செயலிழக்கச்செய்யும். பெண் சிலந்தி உணவு உண்ணும் போது, ஆண் சிலந்தி பின்புறமாகச்சென்று முதுகில் ஏறி அமர்ந்து பாலுணர்வைத்தூண்டும். பெண் சிலந்தி கருத்தரித்து, பிறகு மண்ணில் துளையிட்டு முட்டையிடும். குட்டி சிலந்திகள் பிறந்ததும், சகோதர, சகோதரி சிலந்திகள் தங்களுக்குள் சண்டையிட்டு தின்பதற்குள் குட்டிகள் வெளியேறப்பார்க்கும். இந்த சிலந்தி நம்மைக்கடித்துவிட்டால் விஷமில்லை….என்ன..ஒரு நாளைக்கு வலிக்கும். இன்னொரு வினோதம் என்னவென்றால்  மூன்று நூற்றாண்டுக்கு முன்பு இந்த வகை சிலந்தி வலையில் நெய்த பளபளக்கும் கண்ணைக்கவரும் மஞ்சள் நிற உடை விக்டோரியா, லண்டன், மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. இறைவன் படைத்த லோகத்தில் என்னென்ன விந்தை!                          
 இளைஞர்கள் நிழற்படம் மட்டும் எடுத்து Like வாங்கி என்ன பயன்? அதைப்பற்றி ஆராய்ச்சி செய்யாவிட்டாலும், குறைந்த பட்சம் இணையங்களுக்குப்போய்,() நூல்களைப்படித்துத்தெரிந்து கொள்ளவாவது செய்யாலாமே…….. இது பற்றி விபரத்தோடு பிற இளம் மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுக்கு இயற்கையின் பால் ஈர்ப்பு வரும். இயற்கையைப் பேணுதலுக்கு பலர் முன் வருவர். சிலர் ஆராய்ச்சியில் இறங்கி, சில புது கண்டுபிடிப்புகள் வரவாய்ப்பு உண்டு. படியுங்கள்-பிறகு சிந்தியுங்கள். அழகான நிழற்படம் மட்டுமே போதாது.

Thanks to various websites/bloggers-Reproduced for education purpose



Tuesday, November 12, 2013


சிட்டுக்குருவி தொலைத்த மனிதர்கள்

சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி செய்தி தெரியுமா?

கண்ணுக்கு விருந்து

சிட்டுக்குருவி
(Passer domesticus)

சிட்டுக்குருவி பற்றிய பதிவு சங்க கால இலக்கியத்தில் உள்ளதாவென நானும் என் பறவை குருநாதர் முனைவர் ரத்னம் அவர்களும் ஆராய்ந்த போது எட்டுத்தொகையில் அடங்கும் குறுந்தொகையில் இரண்டு செய்யுள்கள் கிடைக்கப்பெற்றன. சிட்டுக்குருவி ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் ஆசியாவிலிருந்து உலகம் முழுதும் மனிதனால் கப்பலில் பிரயாணித்தும், மற்றும் உணவுக்காக இயற்கையாகவும் பரவியிருக்கும். சங்க காலம்; கி.மு- வலிருந்து 3-ம் நூற்றாண்டு. சங்க காலத்திலேயே நம்மோடு வசித்த பறவையைத்தொலைத்துக்கொண்டிருக்கிறோம். வேதனையளிக்கும்விதம் என்னவென்று  சொல்வது? மனிதன் தன் சுகபோகத்திற்காக எதையும் செய்வான். சிட்டுக்கருவியைப்பார்ப்பதற்கென்றே நான் என் ஊரில் வெள்ளிக்கிழமை கூடும் சந்தைக்கு ஒன்றும் வாங்கவில்லையாயினும் போவேன். சிட்டுக்குருவி சிந்தும் தானியங்களுக்காக அங்கு வரும்.  என் இல்லத்தின் அண்டைப்புறம் இருக்கும் ஊர்வேலன் காட்டில் இருக்கும் ஒரேஒரு குழு சிட்டுக்குருவிகள் கூட்டமாக ஒரு தில்லி முள்மரத்தில் அமர்ந்திருப்பதையும், திடீரென ஒருசேர மாயக்கம்பளம் போல பறப்பதையும் பார்க்க பனிக்காலையில் போவேன்.
அண்டைவீட்டு சுவர் பிளவில் பத்து வருஷத்திற்கு முன்பு கூடு வைத்திருந்தது. நான் குருவி உண்ண குருணை அரிசியை மதில் சுவற்றில் தூவுவேன். அவை தத்தித்தத்தி தானியம் பொறுக்குதைப்பார்த்து, என்மனம் பறந்து போகும். ஒருமுறை ஆண்குருவி மாடி சாளரம் வழி அறைக்குள் புகுந்து வெளியில் செல்லத்திணறிய போது அதன் ஜோடிபெண்குருவி சாளரத்துக்கு வெளியே பார்த்து தவித்த தவிப்பிருக்கே! நம்மைப்போல தான் குருவியினமும்….. இப்போது தண்ணீர் பாத்திரம் வைத்து, தானியம் தூவியுள்ளேன். கூடுப்பெட்டி உப்பரிகையில் தொங்கவிட்டுள்ளேன். குருவி வரக்காணோம்.

பழையதிரைப்படப்பாடல் ஒன்று;-

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்னை விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே

சிட்டுக்குருவியே! நீ பிரிந்து போனதை யாரிடம் சொல்லிப்பாடுவேன்.

பாரதியார் குருவியைப்பற்றி மெச்சிப் பாடி, மனிதனைச்சாடியுள்ளார்.

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
சிறியதோர் வயிற்றினுக்காய்-நாங்கள் ஜன்மமெல்லாம் வீணாய்
            மறிகள் இருப்பதுபோல்-பிறர் வசந்தனில் உழல்வதில்லை

சுவைக்க குருவி பற்றிய சங்க காலத்திய ஒரு குறுந்தொகைப்பாடல் மட்டும் இதோ;-

மாமிலாடன் இயற்றியது

ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ                                     
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண்தாது குடைவன ஆடி,
இல்இறைப் பள்ளித் தம் பிள்ளையொரு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்று கொல்-தோழி-அவர் சென்ற நாட்டே?’  46. மருதம்

குரீஇ= சிட்டுக்கருவி
முன்றில்= முற்றம்
மனைஉறை= இல்லம்வசிக்கும்
உணங்கல்= காய்ந்த தானியம்
மாந்தி= உண்டு
மன்றம்= கொல்லைப்புறம்
பள்ளி=தங்குதல்

பொருள்;
ஆம்பல்பூப் போல சாம்பல் நிறச்சிறகில் இல்லத்தில் வசிக்கும் குருவிகள், முற்றத்தில் சிந்தியிருக்கும் காய்ந்த தானியங்களை உண்டு, கொல்லைப்புறத்திலிருக்கும் எருக்குவியலின் நுண் உயிரிகளைபிடித்து உண்ட களைப்பில் குருவிகள் இரவு வந்ததும் தங்கப்போய்விட்டன. ஆனால் என் கணவர் சென்ற நாட்டிலிருந்து இன்னும் வீடு திரும்பலையே எனத் தோழியிடம் தலைவி புலம்புகிறாள்.

கணவன் பிரிவு சொல்லி தோழியிடம் புலம்பியது போல குருவி தொலைந்த பிரிவை யாரிடம் சொல்லிப்பாடுவேன்.



Saturday, November 9, 2013




Green lynx spider
(Peucetia Viridana)

பச்சை சிலந்தி

நிழற்ப்படத்தில் அழகு காட்டும் பச்சை சிலந்தியை நான் ஒரு விபத்தாக கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் சந்தித்தேன். என்ன அழகு! உடனே என் நிழற்படபெட்டிக்குள் அடைத்தேன். இவை இரண்டு வகை. அமெரிக்காவில் ஒரு இனம்.அடுத்து இந்தியா மற்றும் மயன்மாரில் உள்ளது. நம் நாட்டுச்சிலந்தியை கரை ஓரம் அடவியிருந்த உயரக் குறைவான செடிகளில் கண்டேன். உடல் இரு பாகங்களாகப்பிரிந்து வெளிர் பச்சையாக உள்ளது. எட்டுக்கால்கள் வெகு நீளமாகஊடுருவிய வெள்ளை, அத்துடன் சிறிய கருப்பு முடிகள் உள்ளன. உடலின் முன் பாகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமான கருப்புப்புள்ளிகள், இரண்டாவது பாகத்தில் இலை நரம்புகள் போல வெள்ளையாக இருப்பது காணமுடிகிறது. இதில் ஒரு சிலந்தி தன்னைவிட உருவத்தில் பெரியதான கரப்பான்பூச்சியைப்பிடித்து கபளிகரம் செய்வது ஆச்சர்யத்தை வரவழைத்தது.

சட்டெனப்பார்த்தால் இவை புலப்படுவதில்லை. இலைகளில் அமர்ந்திருப்பதால் பச்சைக்குப்பச்சை ஒன்றிப்போகிறது.இதன் cousin brother (Peucetia viridan) அமெரிக்கப்பிரஜை. இது பற்றி தகவல்கள் நிறைய வலைதளத்தில் கிடைக்கும் போது நமது பிரஜை viridana பற்றி படமும் உருவத்தைபற்றிய விபரமும் தவிர ஒன்றுமில்லை. விரிடான் கடித்தால் வலிக்கும். ஆனால் விஷமில்லை.விரிடானா நம்மைக்கடித்தால் வலிக்குமா?, அத்தோடு விஷம் ஏறுமா? என்பது தெரியவில்லை. விரிடான் விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணுவதால் விவசாயிக்கு பயன் விளைகிறது. அதே சமயம் அமெரிக்கர் இது தேனீயைப்பிடித்து உண்பதையும் பார்த்துவிட்டனர். ஆக இது பூச்சிகள் எது கிடைத்தாலும் விடுவதாக இல்லை. நமது நாட்டு பிரஜை விரிடானா கிட்டத்தட்ட ஒன்றுவிட்ட சகோதரன் விரிடான் போல தான் வாழ்க்கை இருக்கும் என நினைக்கிறேன். விரிடான் இனப்பெருக்கம் உட்பட வாழ்க்கை மிக ஸ்வராஸ்யமாக உள்ளது.வலைதளத்தில் படித்து வியப்படையுங்கள். இயற்கையின் படைப்புகளை கண்டு வியப்பது, அதன் மேல் ஒரு மரியாதை, அதை பாதுகாக்க வேண்டும் என்பது ஆன்மிகத்தின், முதல் படி. விரிடானா பற்றி ஆராயுங்கள் அல்லது அது பற்றி நூல்களில்ஏற்கனவே பதிவாகியிருந்தால் என் வலைதளத்துக்கு(comment) வந்து இது பற்றி பதிவு செய்யவும். Wikipedia விரிடானா பற்றிய விபரங்களை பதிவு செய்ய உங்களை வரவேற்கிறது





Sunday, November 3, 2013



 Blyth's Reed Warbler
 {Acrocephalus dumetorum)



பிளித் நாணல் குருவி

Blyth’s Reed Warbler

பகல் பொழுது மயங்கிக்கொண்டிருந்தது. அதாவது மேற்கே ஆதவன் வேற்று பிரதேசம் பிரவேசிக்கப்போய்க்கொண்டிருந்தான். நான் கொல்லைப்புறம் முகம் கழுவப்போனபோது மருதாணிப்புதர்ச்செடியில் ஒரு சிறுபறவை புதர் கிளைகளில்தாவிக்கொண்டிருந்ததைப்பார்த்தேன். இது கதிர்க்குருவி (Warbler)இனம் எனப்புரிதல்  என் மூளையில் நிகழ்ந்தது.இந்தப்பறவை என் பூந்தோட்டத்தில் என்றைக்கும் இல்லாத திருநாளாய் வருகைபுரிந்திருந்தது எனக்கு மகிழ்ச்சி, ஆரவாரமாக இருந்தது. மேலும் அந்த, குருவி பருமன் பறவை என் இல்ல தோட்டத்தில் இன்று இரவு தங்குவது பெரும் மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணியது. தனித்து அனாதையாக வந்திருந்தது. ‘துறுதுறுவென கிளைகளில் தாவிக்கொண்டிருந்தது. வால் பிளவு பட்டதாக இல்லை. ஆலிவ் பளுப்பு மேலுடம்பும், அடிபாகம் மங்கிய வெள்ளையாகவும், கண்ணுக்கு மேற்புறம் பாதிக்கண் வரை சன்னமான வெண்கோடு மற்றும் கழுத்து வெண்மையாக இருந்தது.
Identification of Warbler is difficult because they never be perched patiently in a branch. There is small variation on body features. They are look alike .So habitat area helps to identify them.
Birds Habitation clew opens identification
Paddyfield warbler – விளைநிலங்களில் காணலாம்
Booted warbler      -  முட்காடுகள்
Large Billed Leaf Warbler  -  பசுமைமாறாக்காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள்
Dull Green Leaf Warbler   -   பூந்தோட்டம் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதி காம்பவுண்டு
Indian Great Reed Warbler – நீருள்ள புதர்ப்பகுதி
Blith’s Reed Warbler       - புதர், பூந்தோட்டம் மற்றும் மரங்கள் உள்ள பகுதி
இதில் மேலே குறிப்பிட்ட கதிர் குருவிகளின்(warblers)வாழிடம்  வைத்துப்பார்க்கும் போது எனது இல்ல வருகையாளர் Blith’s Reed Warbler,மற்றும் Dull green warbler,இவ்விரண்டிலும் எது? எனது இல்லம் மருதாணிப்புதர்ச்செடியும், வேம்பு மரங்ளும் அடர்ந்து இருக்கும் தோட்டப்பகுதி. Dull Green Leaf Warbler இமயமலை அடிவாரத்திலிருந்து பல வருடங்களாக என் இல்லம் வருவது. அதை எனக்கு நன்கு அறிமுகம் இருக்கிறது. இதன் மேல் உடம்பு வெகு மங்கிய பச்சை மற்றும் கண்ணுக்கு மேலே வெளிர் வெள்ளைக்கோடு. மேலும் Blith’s Reed Warbler- விட உருவத்தில் சிறியது.
Food search Habit reveals identification.

DullgreenLeafWarblerகாய்ந்தஇலை,தலைகளுக்கிடை பூச்சிகைப்பிடிக்கத்தாவிக்கொண்டிருக்கும்.
ஆனால் பிளித் நாணல் குருவி புதர் சிமுறுகளுக்கிடையே தாவித்தாவி பூச்சி பிடிக்கக்கூடியது. இரை தேடும் முறையும் இந்த கதிர் குருவி தான் எனக்காட்டிக்கொடுக்கிறது. ஆக உருவம், மட்டுமல்ல வாழிடம், உணவு முறை என்பனவும் பறவை அடையாளத்துக்கு உதவுகின்றன. எனவே என் இல்லம் வந்தது, நிச்சயமாக பிளித் நாணல் குருவி(Blith’s Reed Warbler) தான். இது ஆயிரக்கணக்கான மைல்கள் பாகிஸ்தானிலிருந்து அல்லது குவாட்டா நாட்டிலிருந்து பயணித்து என் இல்ல தோட்டத்துக்கு வந்தது மெய்சிலிர்க்க வைத்தது. இதன் பயணவழி குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகாஎன பறந்து கோயம்புத்தூர், சூலூர் வந்தது அதன் வலிமை, தைரியம், வழி காணும் நுட்ப அறிவு ஆகியவற்றைக்கண்டு வியந்தேன்.
            அடையாளம்(Identification)-கண்டுபிடிப்பதில் வல்லவர் ஆக மேலும் ஒரு முறை இதைப்படித்து, Dr. Salim Ali-யின் Warbler பகுதி- The Book of Indian Birds ஊன்றிப்படியுங்கள்.