Sunday, March 31, 2013Feeding to Chicksநல்ல காகம் தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுதல்
               (கண்ணுபடப்போகுதய்யா!)

நல்ல காகம் என்று ஏன் நாமம் சூட்டினர். நம் ஊரைச்சுத்தம் செய்வதால் நம் முன்னோர் இப்படி பெயர் வைத்தனர். இவனை மாதிரி புத்திசாலி, பறவைகளில் இல்லை எனலாம். இவன் கூடு வைக்க இப்போது சாலையோர மரங்களில்லை. நாம் சொகுசாக காரில் பிரயாணிக்க வெட்டி விட்டோம். இவனை மாதிரி குறும்பு செய்ய பறவைகளில்ஆளில்லை. பேட்டை ரவுடி. பறவை கூடு காலனிக்குள்ளே பறந்து ரவுடித்தனம் செய்வான். ஆனால் இதன் கூட்டுப்பக்கம் ஆட்கள் நாடமுடியாது. வீட்டுமுன்புற வேம்பு மரத்தில் கூடு இருந்த போது, பக்கத்து வீட்டு அம்மாள் அதிகாலை கோலம் போடும் போது புட்டத்தை அலகால் பதம் பார்த்து விட்டது.என் மனைவி தலையில் ரோஜாப்பூ சூடிச்சென்றபோது அதை வழிப்பறி செய்த சில்மிஷத்தை என்னவென்று சொல்வேன்? பருந்து, கழுகு, குயில், ஆந்தை என எந்தப்பறவையையும் சகட்டுமேனிக்கு துரத்தும் பராக்கிரமத்தை எப்படிச்சொல்வது? மாடு, ஆடு போன்ற கால்நடை மேல் ஓசிப்பயணம் இவனுக்குப்பிடிக்கும். மழைநீர் வடிகுழாயில் பிஸ்கட் ஒளித்து வைத்து பிறகு உண்ணும் புத்திக்கூர்மை, குழாயில் ஒழுகும் நீரை குழாயில் அமர்ந்தவாறே லாவகமாக  பருகும் அழகும், முக்காலியில் இருந்த அலுமினிய பாத்திரத்தில் நீர் எட்டாத போது, தன் எடையால் அசைத்து நீர் பருகிய அறிவும் என காகத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
எனது நூல் ‘Diary on the nesting behavior of Indian Birds” (pl.visit: www.nestingbook.webs.com) வெளியிடும் போது இந்த மாதிரி படம் எடுக்க எனது இல்ல ‘சிட் அவுட்’ டிலிருந்து முயன்றும் முடியாது போனது. எனது மொட்டையடித்த மண்டை காகத்திடம்இரண்டு  கொட்டு வாங்கியது தான் மிச்சம். இப்போது எனது ஆஸ்தான போட்டோகிராபர் நண்பர் N. ராதாகிருஷ்ணன் இப்படி படம் எடுத்து மெச்ச வைத்து விட்டார். அவரை மனமார பாராட்டலாமே, தோழர்களே!

Sunday, March 24, 2013


                                                                 
என்னைச்சுற்றி மூச்சு விடும் மரங்கள்
                         நான் வளர்த்த மரங்கள்வேம்பு   
பிங்க் கேசியா     நெல்லி
பியர்ல் புரூட்       கொய்யா                                    
மரமல்லி
குல்மோஹர்
பர்ப்பிள் பாகுனியா                                                                          
சப்போட்டா                                            
                                                           என்எநனநண்பர்களை என்னோடு      
                                                                                   வைத்துக்கொண்டேன்.


                                                                 நானும் நீயும் உயிருள் உயிர்
                                          
சவன்டால்                                              கரியமல வாயு விட நீயதை சுவாசித்து
சப்போட்டா                                        
                                                                எனக்குப் பிராணவாயு ஊட்டினாய்
தேக்கு                                                
                                                                தினம் நீருற்றி உபசரித்தேன்
அருவி மரம்                                           வெப்பம் தணித்து என்னைக் குளிர்வித்தாய்
பூவரசு                                                    களையெடுத்து ஊட்டமாக்கினேன்
இலந்தை                                               சிகப்புப்பூ கம்பளம் விரித்தாய்
கிளிசிரிடியம்                                         இவன் படுத்துறங்க அழைத்தாய்
புளியமரம்                                               தண்டிலேரிய கரையான் தட்டினேன்
ஆலமரம்                                                சாமரமாய் காற்றுவீசி நின்றாய்
நாவல்மரம்                                            தளிரிலை அன்போடு வருடினேன்
மழைமரம்                                              கற்கண்டுப் பழம் ஈன்று தந்தாய்
அரசமரம்                                               நல்ல நண்பனில்லாக் குறை தீர்த்தாய்
மலைஅரசன்                                          உள்ளங்கை இருந்த நண்பனே!
கொடுக்காபுளி                                       வானுயர வளர்ந்து நின்றாய்
வில்வமரம்                                             அன்னாந்து பார்த்தேன்
மாமரம்                                                   சந்தனமென நிழல் பூசி விட்டாய்
மரமல்லி                                                 நண்பனே! நான் ஊற்றியதோ வாளிநீர்
அத்தி                                                       நீயோ நகர்ந்த கருமேகத்தை நிறுத்தி
சரக்கொன்றை                                      அருவியாகக் கொட்ட வைத்தாய்
அசோகமரம்                                          நீ ஒருவனே போதும் நண்பனாய்
பெல்டாபாரம்                                        நீயும் நானும் உயிருக்குள் உயிர்
பெபுபியா ரோசியா                               
இலுப்பை
நாகலிங்கம்
உசிலை
உலவம்பஞ்சு மரம்
கடம்பமரம்                                             மரமில்லையேல் மனித             
                        சமுதாயம் இல்லை
ஏழிலிலைப்பாலை
புங்கன்
மலைவேம்பு
பாதாமி
புன்னை
ஜக்கரண்டா
கொன்றை

Wednesday, March 20, 2013

சிகப்புத்தலை நுண்ணிச்சிறை
Rufousfronted wren- warbler
(Prinia buchanani)

                அரக்கோணத்தில், அப்போது ரயில்வேயில் பணி செய்தவர் ஆங்கிலோஇந்தியர்கள். அவர்கள் ஆங்கிலமும், ஆங்கிலேயர்கள் போல் நடை, உடை பாவனையும் என்னைக்கவரும். இப்போது ஓரிருவர் மட்டுமே தட்டுப்படுகின்றனர். ஆங்கிலேயர் தொப்பி, கோட்டு, சூட்டு, கவுன், ப்ராக், ஆங்கிலம் எங்கு போயிற்று? இறைவன் காட்சிகளை மாற்றி, மாற்றி அமைக்கிறார். ஒவ்வொரு நாள் சூர்ய அஸ்தமனம் போல…..
                திருவாலங்காடு அல்லிக்குளத்தில் மனதைப்பறிகொடுத்து, ரயில் தண்டவாளம் தாண்டி அப்புறம் போனால் நான்கடி உயரம் வளர்ந்த நீரில் நிற்கும் புற்களில் ஒரு ஜோடி சிட்டுகளிள்டூயட்’. ஆஹா! அருமைதழும்பாத நீர் பரப்பு, வட்ட, வட்ட அல்லி மிதக்கும் இலைகள் பின்புலமாகக்கொண்டு சந்தோஷ காதல் பாட்டு. கதிர்குருவி () நுண்ணிச்சிறைகளை இனம் காண்பது மிகக்கடினமானது. தலை பழுப்புசிகப்பு, வெள்ளைப்புருவம், வால் ஓரம் வெள்ளை விளிம்பு, அடிப்பகதி வெண்மை. அத்தோடு கண்ட இடம் முக்கியம். முட்காட்டின் இடையிருக்கும் நீரில் தடித்த நீண்டபுற்கள். மேலும் ஜோடியாக இருந்தது. இவை உன்னை அடையாளம் காட்டிக்கொடுத்தது என் தேவதையே! ஆந்திராவைத்தாண்டி எம் தமிழ் நாட்டு எல்லையோரம் என்னைக்காண வந்தது அதிசயம்வரலாறு காணா புதுமை! இதை என் குறிப்பேடில் எழுதி வைப்பேன்.

Sunday, March 17, 2013Crimson Rose Butterfly life cycle
                   Caterpillar  

Pupa


Crimson Rose

Crimson Rose
(Atrophaneura hector)

நண்பர் திரு.ராமச்சந்திரமூர்த்தி இல்லத்திற்கு சென்ற போது ஆடாதொடை என்று கிராமத்தில் சொல்லப்படும் ஒரு புதர் தாவரத்தை அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். க்ரிம்சன் ரோஸ் (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிக்கு இது உணவுத்தாவரம். இதை ஆங்கிலத்தில் Aristolochia indica என்பர். இதைச்சுற்றியே இந்த உயிரினம் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துக்கொள்கிறது. முட்டை, புழு, கூட்டுப்பருவம், வண்ணத்துப்பூச்சி என நான்கு பருவநிலைகளும் இந்த தாவரத்தைச்சுற்றி சுழலுகிறது. இந்த புதர் தாவரத்தை வீட்டில் வைத்து வளர்த்தால் க்ரிம்சன் ரோஸ் கண்சிமிட்டல் போல சிறகடித்து நம் இல்லம் வரும். நாமும் ரசிக்கலாம். ஆனால் ஒரு செண்ட் இடத்தில் கூட தாவரங்கள் வளர்த்து கண்ணுக்கு விருந்தும், மிதக்கும் மனமும் பெற விரும்புவோரை விட அந்த இடத்தில் ஒரு வீடோ, கடையோ கட்டி வாடகைக்கு விட்டால் பணம் வருமே என்று நினைப்பவர் இன்று  அதிகம். Stills: Sri Ramachandra murthy. Thank you Sir.Wednesday, March 13, 2013
 வானம்பாடியைப்பார்க்காமலேயே கவிதை எழுதும்
கவிஞர்களே! இதோ அந்தமேடையில்லாப்பாடகன்!


வானம்பாடி
Oriental Sky Lark

            திருவாலங்காடு அல்லிக்குளம் மனதை அள்ளிச்சென்றது.அங்கிருந்து சென்னை ரயிலில் செல்லச்செல்ல நகர்புற சாக்கடைகள் தென்படும் ஏரிகளில் கலப்பதால், ஆகாயத்தாமரை பரவி அல்லி மலர்களை தள்ளி காணாமல் அடித்து விட்டன. ஏனெனில் ஆகாயத்தாமரை சாக்கடை நீரில் ஊட்டமாக வளரும். அல்லி, தாமரை மலர்களுக்கு நன்னீரும், சேறும் தேவை. இப்படித்தான் என் சூலூர் செங்குளம் தாம்பூ மத்தில் தாமரைகள் மலர்ந்திருந்தன. மனிதனின் ரசனை இப்போது பணத்திலிருக்கிறது. நீர் குழாயில் தரப்போய் குளம், ஏரி முக்கியத்துவம் மறைந்து, தற்போது நீர் நிலைகள் பெரியகுப்பைத்தொட்டியாகி விட்டன. அரக்கோணத்தில் உள்ள ரயிலடி ஒட்டிய பேட்டிமூர்(ஒரு ஆங்கிலோஇந்தியரின் பெயர்.அப்போதெல்லாம் இவர்கள் அதிகம் வசித்த ஊர்) ஏரியில் பறவை நோக்கலில் லயித்திருந்த போது ஒருவர்இந்த ஏரியை எப்போது கண்டம் பண்ணப்போகிறார்கள்?’ என்று வினவினார். இந்த ஏரியில் பிளாட் போட நினைக்கிறாரோ! நிலத்தடிநீர், காற்றில் குளிர்வு, பறவைகள் தரும் பரவசம், நீரை நம்பியிருக்கும் மற்ற ஜிவராசிகள், வேண்டாமா? சுற்றிலும் மரங்களுடன் நடைபாதை அமைத்து ஓடலாமே! ஆரோக்யம் கிடைக்குமே! எனக்கென்னவோ பணத்தை விட அல்லி மலர்களும், அல்லிக்குளமும், இந்த வானம்பாடிக்குருவியும் அதிமுக்கியமாகப்படுகிறது. அன்று அந்த அல்லிக்குளத்தை ஒரு காதலியைப்பிரிவதைப்போல பிரியமனமில்லாமல் பிரிந்தேன்.

Sunday, March 3, 2013நிலா
 நிலாவே நிலவே நிலாவே                
இதுவரைஎத்தனை பேர் பாடினரோ
நிலாவே
யுகங்களாக எத்தனை பேர் மயங்கினரோ
நிலாவே
முற்றத்தில் தவழ்ந்தும் கடலில் மிதந்தும் நதியில் நெளிந்தும்
மயக்கியது போதும்
நிலாவே நிலவே நிலாவே
கானகம் பொழிந்த பால்நிலாவே
எத்தனை காதலுக்கு சாட்சியாயிருந்தாய்
நிலாவே
ஜன்னலோரம்முகம் காட்டும் நிலாவே
தேநீர் அருந்த வருவாயா
நிலாவே நிலவே நிலாவே
ஏரியில் முகம் பார்க்கும் வெண்ணிலாவே
தலையணை முகம் புதைக்க வருவாயா
நிலாவே நிலவே நிலாவே