Sunday, March 17, 2013



Crimson Rose Butterfly life cycle








                   



Caterpillar  





Pupa














Crimson Rose









Crimson Rose
(Atrophaneura hector)

நண்பர் திரு.ராமச்சந்திரமூர்த்தி இல்லத்திற்கு சென்ற போது ஆடாதொடை என்று கிராமத்தில் சொல்லப்படும் ஒரு புதர் தாவரத்தை அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். க்ரிம்சன் ரோஸ் (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிக்கு இது உணவுத்தாவரம். இதை ஆங்கிலத்தில் Aristolochia indica என்பர். இதைச்சுற்றியே இந்த உயிரினம் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துக்கொள்கிறது. முட்டை, புழு, கூட்டுப்பருவம், வண்ணத்துப்பூச்சி என நான்கு பருவநிலைகளும் இந்த தாவரத்தைச்சுற்றி சுழலுகிறது. இந்த புதர் தாவரத்தை வீட்டில் வைத்து வளர்த்தால் க்ரிம்சன் ரோஸ் கண்சிமிட்டல் போல சிறகடித்து நம் இல்லம் வரும். நாமும் ரசிக்கலாம். ஆனால் ஒரு செண்ட் இடத்தில் கூட தாவரங்கள் வளர்த்து கண்ணுக்கு விருந்தும், மிதக்கும் மனமும் பெற விரும்புவோரை விட அந்த இடத்தில் ஒரு வீடோ, கடையோ கட்டி வாடகைக்கு விட்டால் பணம் வருமே என்று நினைப்பவர் இன்று  அதிகம். Stills: Sri Ramachandra murthy. Thank you Sir.



No comments:

Post a Comment