Friday, August 30, 2013


தமிழ் நாட்டுக்கு வராத விருந்தாளி வந்த அதிசயம்



டோமசல் நாரை
Domoiselle Crane
(Anthropoides virgo)


                இந்த வகை நாரைகள் இந்தியாவுக்குள் கர்நாடகா, ஆந்திரா பகுதிவரை வரும். தமிழ் நாட்டுக்குள் வந்ததாகத் தகவல் பதிவாகவில்லை. இவற்றின் வாழிடம் தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, வட, மத்திய ஆசியா மற்றும் மங்கோலியா. அங்கிருந்துஆயிரக்கணக்கான மைல்கள் குழுவாகப்பறந்து, குளிர்கால வருகையாளராக நம்நாட்டில் சில மாதங்கள் இருக்கும். பிறகு திரும்பு பயணம். இவை பறப்பது கொள்ளை அழகு. கழுத்தும் காலும் நீண்டு குழுவாக V வடிவில் பறந்து போகும். இப்படிப்பறக்கும் போதுட்ரம்பட் உரத்து வாசிப்பது போல ஒலி கொடுக்கும். இது தொலை தூரத்துக்கு கேட்கும். குரல் கொடுப்பது குழு ஒன்றாக இருக்கத்தான். இந்த V வடிவப்பறத்தலில் அருகருகே பறந்து வரும் பறவைக்கு 5 கிமி வேக சக்தியை சேமிக்க முடிகிறது. ஏனெனில் முன்னே பறக்கும் பறவை உந்து சக்தியால் பின்னே வரும் பறவைக்கு லகுவாகி விடுகிறது.
            நான் முதன் முதலில் இதைப்பார்த்தது பல வருஷங்களுக்கு முன்பு விஜயநாராயணம் ஏரி,திருநெல்வேலியில் பார்த்தேன். இது தமிழ்நாட்டில் அதுவும் தென்கோடிக்கு வந்தது அதிசயம். கர்நாடகா, ஆந்திராவை தாண்டாதது, எப்படி வந்தது? அதுவும் ஒரே ஒரு பறவை. இவை குழுவாகத்தான் இருக்கும். சிந்து மற்றும் கட்ச்சில் koonj எனச்சொல்வர். அதற்கு அழகிய மங்கை என அர்த்தம். பறவை உயரமாகவும், உடல் வாகாகவும் இருப்பதால் இப்படி அழைக்கின்றனர். கன்னடத்தில் கர்கோன்ச்சா, தெலுங்கில் வட கொரக்கா எனப்பெயர் இருக்கும் போது தமிழில் இதற்குப்பெயர் இல்லாமல் போனதற்குக் காரணம் இந்தப்பறவைகளை தமிழக மக்கள் பார்க்கவில்லை.
            கைபர் கணவாய் வழியாக சுலபமாக பறந்து வரலாம். ஆனால் வலசைப்பறவைகளிலேயே கடின வழிப்பாதையைத் இவை தேர்ந்தெடுத்துள்ளன. இமயமலை தாண்டி வருகின்றன. 16000 அடி முதல் 26000 அடி உயரம் வரை உயரப்பறக்கின்றன. வரும் வழியில் பசியில் செத்து விழும். களைப்பால் மயங்கிச்சரியும். கழுகு இனம் வேட்டையாடும். மனிதர்கள்? இடையில் ராஜஸ்தான்,கிச்சான் என்ற கிராமத்தில் தங்கி கிராமவாசி ஒருவரின் விருந்தோம்பலை ரசித்து உண்டு, ஓய்வெடுத்து, மீண்டும் பயணத்தைத் தொடர்கின்றன. தமிழ் நாட்டில் இப்பறவை தட்டுப்பட்டதையும் அதனுடைய புகைப்படத்தையும் BNHS, Mumbai, Mistnet –க்கு அனுப்ப, அந்த இதழில்இது பற்றிய நான் எழுதிய கட்டுரைபிரசுரமானது.

  Thanks to photographers of blogged pictures in google. Special thanks to my friend Radhakrishnan who accompanied me and taken Still of Domoiselle Crane at Koonthakulam



Mistnet Journal of BNHS

           
     ஆயிரக்கணக்கான பறவைகள் பறக்க ஆரம்பிக்கும் போது தூரத்தில் கேட்டும் கடல் அலை போல ஒலி கேட்குமாம். இதை ரசித்து அனுபவித்தவர் எழுதி வைத்ததையாவது மீண்டும் ஒரு முறை ரசிக்கலாம். 

The din of a great concourse of koonj taking off the ground, with their kurr, kurr calls uttered in varying keys, has been aptly likened to the distant roaring of the sea.
                                                                                                            Dr. Salim Ali

                                                                                                            The Book of Indian Birds

Saturday, August 24, 2013


NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE NATURE



இயற்கை என்றுமே சரியானது

NATURE IS ALWAYS RIGHT

கவிதை ஆன்மாவின் இளைப்பாறல்













காளான்களாய் சாலையில் குடைகள் முளைக்க
மழைக்கரங்களதில் தாளமிட்டு மகிழ,
நீந்தியவாறு நாமக்கோழிகள் நனைய
தெரியுமதற்கு தன் நாமம் அழியாதென்று;
இலைகளின் தலையைத்தட்டிய மழைக்கரம்                      
அமிர்தமூட்டியது நிஜமே! தெரிகுது
குதித்தாடிய இலைகளின் குதூகலத்தில்;
மின் கம்பத்திலமர்ந்த பறவைகளே! இறகு கோதாதீர்!
இன்னும்  மேகத்தில் மழையுண்டு.
காதலி முத்தமிட மயிர்க்கால்கள் சிலிர்த்ததென
தடாக நீர்மேனி சிலிர்த்தது நிஜமே!
வாழிய! மழை! மாதம் மும்மாரி பொழியவே!
இன்னும் மேகத்தில் மழையுண்டு! நண்பரே!
குடைதேடி, தூசிதட்டி வைக்கலாமே!--------------   சின்ன சாத்தன்
-

Re-connect to Nature  Re-connect to Nature

Thursday, August 22, 2013

கோணமூக்கு உள்ளான்                             Hockey Player           
Avocet (Recurvirostra avosetta)
இந்தப்பறவை ஒரு ஹாக்கி பிளேயர்  

                                               


                ஜுலை மாதம் நான் சென்னைக்கு ஒரு அலுவல் நிமித்தமாகச்சென்ற போது நண்பர் Sri Ram(The wild trust)-உடன் பள்ளிக்கரணை சென்றேன். அங்கு ஆச்சர்யப்படும் வகையில் கோணமூக்கு உள்ளான் நூறு இருந்தன. இவை சதுப்பு நிலநீர்ப்பகுதியில் இருப்பது இயற்கை.என்ன ஒரு அழகான பறவை. இவை கட்ச் வளைகுடா, வட பலுசிஸ்தான் பகுதியில் இனப்பெருக்கம் செய்கிறது என்றும், குளிர் கால வருகையாளர் எனவும் Dr. சலிம் அலி The Book of Indian Birds-ல் பதிவு செய்திருக்கிறார். வலசைப்பருவம் செப்-அக்டோபரில் தான் ஆரம்பம். ஆனால் ஜுலையில் தமிழ் நாட்டில் பார்க்கமுடிகிறது என்றால் சீதோஷ்ண மாறுபாடு நிகழ்ந்து கொண்டிருப்பது நன்றாக உணரமுடிகிறது. Moreover Dr. Salim Ali recorded that sparse in the south. இவர் பதிவு செய்து 70 வருஷம் ஆயிற்று. ஆனால் இன்று சென்னையில் சில பத்து கோணமூக்கு உள்ளான் அல்லாமல் நூறு என எண்ணிக்கையில் பார்த்தேன். Birds are not only indicator for polluted area but also good indicator for climate change. 70 வருஷங்களில் மனிதனின் சுகபோக வாழ்க்கையால் சிதோஷ்ணநிலை(Global warming) மாறி உள்ளதை இந்தப் பறவை உணர்த்துகிறது.

            இது கரை ஓரத்தில் பூச்சி, புழு, நத்தை பிடிக்கும் பறவை(wader). இருப்பினும் கால் விரல் ஜவ்வுகளால் இவை நீந்தவும் செய்வது வியப்பு. இதன் பிரத்யேகத்திறமை இது நீரில் ஹாக்கி விளையாடுவது. இந்த கண்கொள்ளாக்காட்சியைப்பார்த்தால் போதும் ஜன்மம் கடைத்தேறிவிடும். அப்படி ஒரு ரம்மியம். இந்த விளையாட்டில் கிடைப்பது உணவுதான். Dr. சலிம் அலி இந்த விளையாட்டை எப்படி விவரிக்கிறார், பாருங்கள். அவரைத்தவிர இப்படி விவரிக்க யாருக்கும் வராது. தன் ஆங்கில மொழி ஆளுமையால் காட்சியை அப்படியே கண்முன் நிறுத்திவிடுவார். இதோ;- In feeding the curiously upturned bill is wielded rather like a hockey stick, the curved part skimming the semi-liquid mud with a back and fore rotatory or churning motion, washing out the food particles; small crustacea, worms, aquatic insects, etc.

Friday, August 9, 2013


மரக்கூட்டம் காடு என்பது நினைவில் இருக்கட்டும்
நமக்கு மழை தருவது எது? அதுவே.......
மரம் என்ன தான் தரவில்லை?                     மரம்


மரம் இல்லையேல் மனிதஇனம் அழிந்துவிடும.

மரம் மாதிரி ஒரு கொடையாளியைப்பார்க்க முடியுமா?

யோகத்தில் ப்ரத்யாகரா இது. மரமாக மாறி விட்ட தன்மை.




காதலன், காதலி இதயத்தில்- காதலி இதயத்தில் காதலன் போல மரத்தின் உயிரில் நான்-என் உயிரில் மரம். ஆனால் ஒரு பக்தனின் இதயத்தில் சிவன்.
 நம் முதாதையர் வீடு மரம்
மரத்தின் இலைகள் மனித நுரையிரல்கள்


                             





நாம் வசிக்க வீடு தந்தது
மரம் யாரை வெறுத்தது
எல்லாருக்கும் எல்லாமும் தந்தது






               


நாம் விளையாட மடி தந்தது

மர நாற்று மழைக்கு குடைப்பிடித்ததற்கு நன்றி செழுத்துகிறது. ஆனால் நாம்.......................... 

நானும் மரமும் உயிருக்குள் உயிர்.

 மரத்தை ஊதாசினப்படுத்தினால் மனித இனம் அழிந்து படும்.
Art: Hema, artist. Conceived: Chinna Sathan

Wednesday, August 7, 2013

ENVIRO
சாக்கடைச்சங்கமம்

 RK Beach, Vizhak
 
A SCENE FROM SILIKA LAKE

சுற்றுச்சூழல் Incredible India
நம் பேச்சுக்கும் நம் செயலுக்கும் சம்மந்தமில்லை


          அன்று சுற்றுச்சூழல் தினம்.(5.06.13, புதன்)   விசாகப்பட்டிணத்தில் அலுவலக நண்பர் வஜ்ரவேலுவுடன் RK Beach-ல் நீலக்கடலைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு அழகான, முதன்மையான கடற்கரை. நகரமையத்தில் உள்ளது. வைசாக் சுற்றுலா வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது, மக்கள் கூட்டம் வந்து கடலை ரசித்து காற்று வாங்கும் கடற்கரை. தெற்குப்புறமாக நகர கழிவு நீர் கலந்து சாக்கடையோடு பிளாஸ்டிக் கழிவுகள் கடல் அலையில் போயும் வந்தும் அருவறுப்பு ஏற்படுத்திக்கொண்டிருந்தது. அன்றும் மக்கள் கூட்டம் வழிந்தது. கடற்கரை சாலை மேற்குப்புறமாகச்சென்றது. அங்கு பார்த்தால் இளைஞர், இளைஞி கூட்டம் ஊர்வலமாக சுற்றுச்சூழல் தினம்  பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பிப்போய்க்கொண்டிருந்தனர். அவர்கள், தங்கள் கடற்கரையை அசிங்கப்படுத்திவிட்டு வாய்கிழிய கோஷம் எழுப்பி, மக்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி விழிப்பு ஊட்டுகின்றனர். அவர்கள் கடற்கரைக்கு அவர்களே சாக்கடை, மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அனுப்பிவிட்டு, அதை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையுமற்று சுற்றுச்சூழல் தினம்  விழிப்புணர்வு ஊர்வலம் போகிறது.