Tuesday, June 18, 2013

TRAVEL


 போரா குகை நுழைவாயிலில்  நண்பர் வஜ்ரவேலு









குகைக்கு மேல் சிற்றாறு




Bora caves-
யாத்திரை
போரா குகைகள்
                       
குகைகளில் விலங்குகள் தங்கும். தவம் மேற்கொள்ளும் ரிஷிகள், ஜைனத்துறவிகள் குகைகளில் தங்குவர். குகைகளுக்குள் வொளவால்கள் கூரைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். அதன் நாற்றம் மேலும் கீச்,கீச் ஒலியை வைத்துத்தெரிந்து கொள்ளலாம். குகைகள் குளிர்ச்சியாக இருக்கும். ஏனெனில் நீர் பாறையிலிருந்து சொட்டிக்கொண்டிருக்கும். நீரில் உள்ள humic acid பாறையிலிருக்கும் கால்சியம் கார்பனேட்-டுடன் கிரியை நடத்தி,ஆயிரக்கணக்கான வருஷங்கள் தாதுஉப்புகள் கலந்து வரும் மலைச்சிற்றாரு இந்த போரா குகைகளை செதுக்கியுள்ளது. இங்கு ஆழத்தில் சிவலிங்கம் உள்ளதால் சிவராத்திரி அன்று இரவு அக்கம் பக்கத்து மலைவாசிகளின் குழு நடனம், பாட்டு, தாளம் விடியல் வரை நடக்கும். குகைக்கு மேற்புறம் ரயில் இருப்புப்பாதை ஒன்று செல்கிறது. விசாகப்பட்டிணத்திலிருந்து 90 கி.மீ வடக்கே உள்ளது.கிழக்குத்தொடர்ச்சி மலையில் 800 – 1300 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

வில்லியம் எனற ஆங்கிலேய புவியியல் நிபுணர் 1807-ல் இந்த குகையைக்கண்டு பிடித்தார். கால்சியம் பை கார்பனேட் குகை தாதுகளோடு கைகோர்த்து குகைக்குள் சிற்பங்கள் வடித்தது போல் இருக்கின்றன. இவை பார்ப்பவர் மனக்கற்பனை ஓட்டத்துக்குத்தக்கவாறு தெரியும். சிவபார்வதி, தாய்சேய், ரிஷிதாடி, புலி, பசு, முதலை எனப்பார்ப்பவர் கற்பனைக்குத்தக்கவாறு இந்த குகை சுவர்களிலிருந்து துருத்திக்கொண்டிருக்கும் stalagmites தோன்றும். வால் போல் தொங்கும் அமைப்புகள் stalactites ஆகும். 200 மீ தூரக்குகை. நாம் உள்ளே(trekking) நடப்பது 320 மீ. இந்த குகை ஆளை மிரட்டும் பெரிய குகை.வியப்பை ஊட்டக்கூடியது. இயற்கையின் கைவண்ணம்.


இது பற்றி சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம் ரயில் சினேகிதர் சொல்லித்தான் எங்கள் நிரலில் சேர்ந்தது.கோஸ்தானி ஆறு இங்குள்ள பள்ளத்தாக்கை வளப்படுத்துகிறது. 30000-50000 வருஷங்களுக்கு பழமையான பழங்குடியினர் வாழ்ந்ததற்கு அடையாளமாக, இங்கு ஆந்திர பல்கலை ஆராய்ச்சியில் பல கல்ஆயுதங்கள் கிடைத்துள்ளன. 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.இந்த குகையில் நடந்து கண்ணுற்றது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம்.

No comments:

Post a Comment