Friday, August 17, 2012


பறவை விற்பனை

தண்ணியையே விற்பனைக்குக்கொண்டுவந்தவன் பறவைகளை விற்கமாட்டானா? கிளி, லவ் பேர்ட், தினைக்குருவி, ஆப்பிரிக்க கிளிகள் என விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் விழுங்க பிராய்லர் கோழி, நாட்டுக்கோழி, கினி, ஈமு, காடை, கவுதாரி போன்ற பறவைகள் கடைகளில் கிடைக்கின்றன. நல்ல வேளை! இதனால் காட்டுப்பறவைகள் சில தப்பின. கோவைக்குளங்களில் நீர்வற்றிவிட்டால் பறவைகளைப்பிடிக்கும் மனிதர்களை எதில் சேர்த்துவது? பிராய்லர் வண்ண கோழிக்குஞ்சு விற்பனை தனி வழி! கோழி ஃபார்மில் குஞ்சுகளை வாங்கும் ஏஜண்டு மெசின் தெளிப்பில் 100 குஞ்சுகளை போட்டு சாயம் பூசுவார். அப்போது குஞ்சுகளின் கண்களில் கெமிக்கல் போகத்தான் செய்யும். சைக்கிளில் கூடையைக்கட்டி ஊர் ஊராகப்போய் ஒரு ஜோடி, ருபாய் ஐந்துக்கு விற்பனை. பாவம். 7.5 கோடி தமிழர் வாழ பலவழிகளில் போகின்றனர். காகம் ஏமாந்தால் கூட பிரியாணிக்கடைக்கு போக வேண்டியது தான். கோவையில் பறவைகள் வேட்டையாடப்படுவதைக்கண்டால் நீங்களே கண்டிக்கலாம், தடுக்கலாம். மீறினால் வனத்துறை தொலைபேசி எண்; 0422-2456911 or send SMS to 94431 53200 க்கு தொடர்பு கொள்ளவும்.

2 comments:

  1. coloured chicks are mostly discarded males and to sell these unwanted birds they paint to attract the cchildren.

    ReplyDelete