Thursday, August 16, 2012

அறிமுகம்........


எதற்கு இந்த மழை குருவி வலைத்தளம்?

பறவைக்கென்றே இந்த வலைத்தளம் சிறகு விரிக்கிறது. இதில் விதவிதமான வண்ணதேவதைகள் இறக்கைகளை விரிக்க உள்ளன. நீங்களும் மனம் லேசாகி இறகுகளாக மிதந்து செல்லலாம். இதில் பறவை நிழற்படங்கள், பறவை பாதுகாப்பு, பறவை நோக்குதல், வனவலம், காணாமல் போகும் பறவைகள், சுற்றுச்சூழல், இயற்கை, காணுயிர் நூல்கள், வண்ணத்துப்பூச்சி போல பிற உயிரினம், கவிதைகள் எனப்பறவைகளை மையமாக வைத்து வட்டமிடும் நினைவுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன் வாருங்கள், பறவைகளோடு சேர்ந்து பறப்போம்.

என்னைப்பற்றி

எனக்கு அப்பா வைத்த பெயர் சுகுமார். புனைப் பெயர் சின்னசாத்தன். மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் கண்காணிப்பாளராகயிருந்து ஓய்வு பெற்றபின்பு எனது பறவை நேசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வனவலம், இமயவலம், மரமும் நானும், Diary on the nesting behavior of Indian Birds என்ற நுல்களில் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமாகியுள்ளேன். நீங்களும் பறவைகளைப்பற்றி எனது இ-மெயிலுக்குசெய்தி அனுப்பினால் இந்த வலைதளத்தில் பறவை அன்பர்களோடு பகிர்ந்து கொள்வேன். இந்தக்கால சந்ததியினர் நூல் வாசிப்பு சுவையைத் தவறவிட்டவர்கள். இந்த வலைதளம் வாசிப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும். உங்களுடன் எனது தோழமை தொடர கை குலுக்குகிறேன்,வாருங்கள்என்னுடன்சிறகைவிரியுங்கள்.                                                                                       

9 comments:

  1. நல்ல முயற்சி.தமிழில் பறவைக்கென்ற வலைத்தளங்கள் குறைவே.விடாமல் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies

    1. Thank you Madam for encouragements. Please keep visit my blog.

      Delete
  2. உங்கள் அனுபவம் மற்றும் வருகை தமிழ் வலை உலகத்திற்கு பெருமை சேர்க்கும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. உங்களின் இந்த மகத்தான பணி வெற்றிகரமாக தொடர எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    வீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள். நான் இந்த தளத்தின் ஒரு உண்மையான வாசகர் என்று உறுதியளிக்கிறேன் - ஸ்ரீனிவாசன் சின்னசாமி

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. It was a wonderful experience in going through your blog on birds. I appreciate your sincere efforts in bringing this blog in Tamil. It is impeccable. I still remember the days we have traveled together to Koondhankulam I know very well how much you love nature as well as Lord Siva. At this juncture I pray that almighty may give you long life and strength to undertake more projects on birds in the years to come.

    ReplyDelete
  8. My dear friend,

    Thank you very much for encouragement and praise. I try to keep this blog as you've expected and I pray Lord Shiva to bestow bliss to us and all.

    -Chinna Sathan

    ReplyDelete