Monday, March 31, 2014


Rain treeபருவ காலங்கள் வசந்த காலத்தை வெவ்வேறு விதமாகக் கொண்டாடுவது புலப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இந்திர விழா பற்றி வருகிறது. இது வசந்த விழாவாக இருக்கும். மாடம், கடற்கரை, ஆறு எனக் காதலியுடன் கூடிக் குலாவி பாடல், இசைத்து முழு நிலாவுடன் மகிழ்ந்து போகின்றனர். நம்மூர்களில் மாரியம்மன், மாகாளியம்மன் கோயில் களில் விழா முடிந்த மறுநாள், மஞ்ச நீரடி விழா. மஞ்சள், சுண்ணாம்பு என நீரில் கரைத்து மாமன்மார்களைப்பார்த்து முறைப்பெண்கள் நீரை அடிப்பது விளையாட்டான பேருவகை.வடபுலத்தை எடுக்குக் கொண்டால், ஹோலிப் பண்டிகையின் போது வண்ண வண்ணச்சாயங்களின் நீரால் ஒருவரை ஒருவர் தெளித்துக் கொள்கின்றனர். மரங்கள் பூக்களை வர்ஷிக்க, மணம் பரப்பிட விழா. பனி, மழை, குளிர் விலகி, ஆதவனின் முகம் தெரிய வசந்த விழாக்கள் தொடக்கம். வசந்த பருவத்தில் வேப்ப மரங்கள் புத்தம் புது இலைகளோடு, வெள்ளைக்குறும்பூக்கள் மெல்லிய மணம் பரப்புகின்றன. சித்திரை ஒன்றில் வேப்பம் பூக்கள் அருந்த தயாராக இருக்கும், உகாதிப் பண்டிகை. ஆகவே மரமும், பருவமும், பண்டிகைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து நாம் கொண்டாடுகிறோம்.வசந்த காலம் எது என மக்களுக்கு மறந்து போனது. மாசி ,பங்குனி தான் நமக்கு வசந்த காலம். மாசியில் மரங்கள் இலைகளை உதிர்த்து புத்தம் புது தளிர் இலைகளை ஏந்துகின்றன. மாசிக்கடைசியிலேயே மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மரங்கள் வசந்த்த்தை வரவேற்கின்றன. மரங்களுக்கு ஐப்பசி மழை கிடைத்து மாசி, பங்குனியில் சூரியன் வெப்பம் பெற்று பூக்கள் மலருகின்றன. செம்மண், அத்தோடு நீரும், வெப்பமும், காற்றும் சேர்ந்து எப்படித்தான் வண்ண வண்ண மலர்களைக் கொண்டு வருகின்றனவோ! மனிதன் வாழ்வில் இயற்கையைப் பார்த்து வியப்படைய வேண்டும். மண் எப்படி விதவிதமான மலர்களுக்கு வாசனையைக் கொண்டு வருகின்றன, மக்கள் வியப்படைய வேண்டும்.பருவ காலங்கள் இந்த உலக வெப்ப மயமாதலில் களைக்கப்பட்டு விட்டது. வெய்யில், மித வெய்யில், அதிவெய்யில், தகிக்கும் வெய்யில் என்பது போல வெய்யில் மூன்று, மூன்று மாதங்களாக நம்மைப் படுத்துகின்றன. பருவ காலங்கள் பிழை பட்டதை சீர்படுத்த, சோலைகளை ஏற்படுத்த வேண்டும். நீர் நிலைகளைப் பாழ் படுத்தி, அதில் பேருந்து நிலையம் போல கட்டுமானம் செய்தல் கூடாது. மலைப்பயிர்களான தேநீர், காபி பயிரிடுதலை கைவிட்டு மலைகளில் மழைக்காடுகளை ஏற்படுத்த வேண்டும். இப்படி அறிவுப்பூர்வமாக செயல் பட்டால் வரண்டு போன ஆறுகள் மீண்டும உயிர் பெறும். பருவ காலங்கள் மீண்டும் மலரட்டும். அவற்றோடு நமது வாழ்க்கையும் பேருவகை கொள்ளட்டும்.
Pink Cassia

தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து,
மன்னவன் கூடல் மகிழ்துணைதழூஉம்
இன்இளவேனில யாண்டு உளன் கொல்? -   சிலப்பதிகாரம்


Clisiridiumகடம்பமரம்


                                                            சிலப்பதிகாரம்
சோலைகளும், கானகமும் அழகான மலர்களை ஏந்தி நிற்க
பொதிகை மலை ஊடே வந்த தென்றல் நகருக்குள் புக
மன்னன் தன் துணையை மகிழ்ந்து தழுவும்
இந்த இளவேனில் காலம் போல எதுவும் இல்லை.


இது போல ஆறு பருவகாலங்களையும் சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. இலக்கியங்களை நீங்கள் படித்து இன்புறவேண்டும்.

No comments:

Post a Comment