நிழற்படக்கவிதை
அந்தி
சின்ன சாத்தன்
இரவில்
போஜனம் தேடும் ஜீவன்களே
வெளியில்
வருக! இருள் கவிந்தாயிற்று
அந்தி
வானச்சிகப்பு உவமைக் கவிஞர்ளே!
போர்க்கள
குருதிக் குளத்து சிகப்பிது
நாணிய
மங்கை கன்னக் குங்குமமிது
இறைவன்
பிரதி மாலை மயக்கும் ஓவியன்
மாற்றி
மாற்றி வண்ணம் தீட்டுவான்
நேற்று
மாலை போல இன்றில்லை
இன்று
மாலை போல நாளையிருக்காது
அனு
மாலையும் புத்தம் புது ஓவியம்
மணப்பெண்
கன்னி கழிய காத்திருந்த மாலை
பகலவன்
காய்ச்சிய சூடு தணியும் பூமி
பறவைகள்
ஓய்வெடுக்கப் பறந்த திசைகள்
கங்குல்
மெதுவாய்க் கவிழ மறைந்தன
விளக்குகள், நட்சத்திரங்கள்,
நிலவு
தொடங்கும்
ஆட்சி ,உதயமாகும் வரை……..
No comments:
Post a Comment