இருந் தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந் தமிழ்தம் என்றாலும் வேண்டேன்
இலக்கியமும் பறவையும்
கணவன் பிறிவாற்றாமையில் வருந்தும் தலைவி |
குஞ்சுகளுக்கு இரையூட்ட ஏகும் பறவை (Black winged Stilt) |
சூரியன் எழுந்து வானம் பரவி,
ஒளி வீசுகிறான். பறவை நாளெல்லாம் தேடி, இரை பிடித்து தன் குஞ்சுகளுக்கு ஊட்ட மாலைப்பொழுதில்
விரைகிறது நீ பாராய்! ஆயின் உன் கணவன் பொருள் தேடி வேற்று நாடு சென்றவன் இன்னும் உன்னை
வந்து அணையவில்லையே தோழி!
தமிழ் செரிவான மொழி.இதோ மேற்ச் சொன்ன பிரிவாற்றாமையைச்
சொல்லும் இந்த குறுந்தொகைப்பாடலைப்படியுங்கள்.
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச்
செரீஇய
இரை கொண்டமையின்
விரையுமால் செலவே (குறுந்தொகை(92))
ஓவியக்கலைஞருக்கும்,
புகைப்படக்கலைஞர் நண்பர் அருந்தவச்செலவனுக்கும் நன்றி.
No comments:
Post a Comment