Thursday, September 5, 2013


பூநாரைகள் (Greater Flamingo)
(Phoenicopterus ruber)
 தமிழகத்தில் வருஷம் முழுவதும் இருக்கின்றனவா?


பூநாரைகள்-கருங்குளம், திருநெல்வேலிக்கருகில்
கைவிடப்பட்ட கூட்டுக்கருகில் பூநாரை கால்தாரை

பாதி அழிந்த கூடுகள்


          ஆம்! என்றே சொல்லத்தோன்றுகிறது. சென்னை,பள்ளிக்கரனை சதுப்புநில நீர்நிலையில் வருஷம் முழுவதும் பார்க்க முடிகிறது என்பது மிகையல்ல.கூந்தகுளம்,காடன்குளம்,கருங்குளம்,வடக்கு விஜயநாராயணம் அங்கிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையோர நீர் குறைவான ஏரிகளில் வலசைப்பருவம் இல்லாதபோதும் பார்த்திருக்கிறேன். ரானா ஆஃப் கட்ச்(குஜராத்) பகுதி பூநாரைகளுக்கு சொந்த பிரதேஷம். அங்கு தான் இனப்பெருக்கம் நடைபெறுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்-மார்ச் வலசைப்பருவம் வந்து பின் குஜராத்துக்குத்திரும்பிவிடும் என்பது பதிவு.
           
  ஒரு பருவத்தில் பூநாரைக்கூடுகள் பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டவைகளை கூந்தகுளத்திலும், காடன்குளத்திலும் பார்த்தேன். பூநாரை ஒரடி போல குளத்தோரநீரில் சேற்றைக்கொண்டே குயவன் சட்டி போல் வளைந்த மூக்கால் ஒரடி உயரம் கட்டி அதன் மேல் ஒரு முட்டை வைத்து அடைகாக்கும். கூடுகளைக்காலனியாகப்பார்க்கலாம். இதற்கு உகந்த ஒரு அடி அளவிளான நீர் வற்றிவிட்டதாலும், அல்லது மிகையானதாலும் பூநாரையால் கூட்டை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்பாதி உருவான கூடுகள் கைவிடப்பட்டன. நிழற்ப்படத்தில் காண்பது அத்தகையகூடுகள்தான்.

            நானும் சும்மாஇருக்காமல் கூந்தகுளத்திற்கு நீர் தரும் மணிமுத்தாறு பொதுப்பணித்துறைக்கு எழுதி சரியான அளவு நீரை கூந்தகுளத்தில் தேங்க விட்டால் தமிழகத்தில் கூட பூநாரைகள் இனப்பெருக்கம் செய்யும் என்றேன். இது தவிர BNHS, Mumbai-க்கு எழுதி இது குறித்து மேலிடத்துக்கு எடுத்துச்செல்ல வேண்ட,திரு. Asad R Rahmani,Director, BNHS, Mumbai எனக்கு ஒரு அழுவலகக்கடிதம் எழுதினார். அதில் இதனால் தான் BNHS, கூந்தகுளம் IBA (Important Bird Area) என பிரகடனப்படுத்தியுள்ளோம், என்று எழுதியதோடு சரி!

No comments:

Post a Comment