இடி விழுந்த இடம்
![]() |
![]() |
| பூமியில் கத்தி சொருகியது போல் காணப்புடும் இடம் இடி விழுந்து இடம் |
வாழ்நாளில்
நான் இடி விழுந்த இடம் பார்த்ததில்லை. நிறையப்பேர் என்னை மாதிரி தான். நான் என் வீட்டருகில்
இருக்கும் விஜயவிநாயகர் கோயிலில் இருக்கும் போது நண்பர் பேச்சியண்ணன் பக்கத்துக்காலனி
நேரு நகரில் இடி விழுந்ததாகச்சொன்னார். பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்றார்.
என் வீட்டிலிருந்துதென்கிழக்கு திசையில் ஒரு கி.மீ. தான் இருக்கும். ஆம்! சனிக்கிழமை
அதிகாலை நான்கிருக்கும் ‘சடச்சட’ வென செமத்தியான மழை. இடி மின்னல் கர்னகொடூரமாக உருமி
அதிர்ந்தது. இரண்டு இடி நிலம் அதிர்வது போல விழுந்தது. மாடியில் தனியறையில் படுத்திருந்த
எனக்கு பயம் கவ்விக்கொண்டது. எப்படா! இடிஇடிப்பது ஓயுமென இருந்து பிறகு அரைகுறை உறக்கம்.
ஞாயிறுக்கிழமை
பேச்சியண்ணன் இந்தச்செய்தியைச்சொல்ல இடி விழுந்த இடத்தைப்பார்க்க ஆவல் முட்டியது. இரண்டு
நீர் உட்கொண்ட மேகங்கள் மோதிக்கொள்ளும் போது மின்சாரம் ஏற்பட்டு முதலில் மின்னல் கண்ணுக்குத்தெரிகிறது.
பிறகு காதுக்கு இடி சப்தம் கேட்கிறது. பொதுவாக மக்கள் பயந்து போய் அர்ஜுனா அர்ஜுனா என்று ஜபிக்க ஆரம்பித்து விடுவர்.
மின்னல் ஒரு விந்தை. அதிலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா? அதிலிருந்து எடுக்க நமக்கு
வல்லமை குறைவு. இடி மழையில் காளான்கள் பூமியிலிருந்து மேல் எழும்பி வரும். நீர் இடி
நீரைத்தரும். நெருப்பு இடி தீப்பிளம்பு ஆகும். இடி விழுவது இல்லை. நான் சிறுவனாக இருக்கும்
போது இடி விழுவது என்றால் ஒரு பெரிய பாறை மாதிரி எதோ ஒன்று வானிலிருந்து விழும் என்று
நினைத்திருந்தேன். மிகைபட்ட மின் தாக்கு.
மின்னல் பூமியை நோக்கி
வருவது அதற்கு எதாவது ஒரு பொருள் வேண்டும். தனது சக்தியை வடிய அது பூமியை நாடுகிறது.
உயரமான கட்டிடங்கள், மரங்கள் போல இடி தாக்கலாம். உயரக்கட்டிடங்களில் இடி தாங்கி வைத்துள்ளனர்.
மின்னல் வெட்டி வரும் போது மரங்களுக்கு அடியில் இருக்கக்கூடாது என்கின்றனர். நான் இப்போது
தான் மின்னல் தாக்கிய இடத்தைப்பார்க்கிறேன். கத்தியில் துளைத்தது போல ஒரு பிளவு. அதிலிருந்து
மின்னல் தாக்கிய சனி அதிகாலையிலிருந்து, அன்று மதியம் வரை நீரூற்று அதன் வழியே வந்து
கொண்டிருந்தது. பிறகு நின்று விட்டது. அது வெற்று இடம். வீடுகட்ட யாரோ வாங்கிப்போட்டிருக்கின்றனர்.
அவர் அங்கு ஆழ்குழாய் இட்டால் தண்ணீர் வற்றாது என்கின்றனர். நல்லவேளை! அந்த மின்னல்
தாக்கிய இடத்தின் மேற்குப்புறமும், வடக்குபுறமும் தார்சு வீடுகள். அவை மேல் விழவில்லை.
Lightning
arrester, Lightning conductor, Lightning rod இவை எல்லாம் மின்னல் கட்டிடம், மின்
டவர் ஆகியவற்றைத்தாக்கினால் மின் கடத்தி பூமிக்குள் அனுப்பி விடும். மின்னலில் தான்
எத்தனை வகை! lightning எனத்தட்டி வலைதளங்களுக்குப் போய் படித்தால் பிரம்மிப்பாக உள்ளது.
உன் தலை மேல் இடி விழ என யாரையும் சொல்ல வேண்டாம். Star watching போல
Lightning watch , மழை பெய்யும் போது கவனித்தால் பத்து விதமான மின்னல்களை கண்டு ரசிக்கலாம்.
ஒரு நாளில் பார்ப்பது அரிது.ஆனால் கண்ணுக்கு யார் உத்திரவாதம்? ஆகவே வலை தளத்திலாவது
கண்டு ரசியுங்கள்.


No comments:
Post a Comment