Brood parasitic Bird
Nidicolous
Koels
Nidicolous
means young ones look like the adults but still beg their parents for food with
bills wide open while flying with them.
இரண்டு
வார காலமாக எனது இல்லத்தைச்சுற்றி நிடிக்கோலஸ் குயில்களைப்பார்த்து ரசிக்க முடிகிறது.
இரண்டு மூன்று, அந்தவிதமான குயில்கள் step mother-ஆன காகத்திடம் உணவுக்காக துரத்தித்,
துரத்தி கர்ர்ரு……கர்ர்ரு……என வாயைப்பிளந்தவாறு தேக்கு, வேம்பு மரங்களின் கிளைகளில்
தாவுகின்றன. இவை ‘சட்’ டெனப்பார்த்தாலே நமக்குத்தெரியும் குயில் தாமென்று….. அதுவும்
ஆண்குயில்கள், வெளிர் பச்சை மூக்கு, கருத்த மேனி மற்றும் க்ரிம்சன் கண்கள். பெண்குயில்கள்
பொரி உடல். அப்படியிருக்க, நல்ல காகம் பறவைகளிலேயே அறிவானது. குயிலென அதற்குத்தெரியாமலாயிருக்கும்.
அப்படியிருந்தும் சில வாரங்களாகவே நிடிக்கோலஸ் ஆண்குயில்களுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருக்கின்றன.
குயிலின் முக்கிய உணவு பழம்,
பெர்ரி, அத்தி, சில சமயம் மட்டும் புழு, பூச்சி உண்ணும். step mother காகத்தின் உணவு,
கிடைக்கும் எதுவும் உண்ணும்.(Omnivorous) அப்படியிருக்க,
நிடிகோலஸ் குயில்களுக்கு நிச்சயமாக காகம் பழவர்க்கங்களைத்தேடிப்பிடித்து, வந்து ஊட்டாது.
கிடைக்கும் எதுவும் ஊட்டும், குயில்களும் அதை வாங்கி பசியாற்றுகிறது. நிடிக்கோலஸ் பறவைகள்
சோம்பேரிகள். அவை இரைதேடிக்கற்றுக்கொள்ளத்தயக்கம் காட்டுகின்றன.
காகத்தைப்போல கள்ளம், தைரியம்,எச்சரிக்கை
உணர்வு எந்தப்பறவைக்கும் வராது. அப்படியிருக்க, குயில் எனத்தெரிந்தும் காகம் ஊட்டுகிறது
எனில் இயற்கையை வியந்துதான்ஆக வேண்டும் தோழா! சிலம்பன்கள்(Babblers) சுடலைக்குயில்(Pied
crested Cuckoo) களுக்கு உணவு ஊட்டுகின்றன. அதாவது ஐந்தறிவுக்குள்ளிருக்கும் ஜீவன்கள்
எந்த இனமாகயிருந்தாலும் மற்றயின ஜிவன்களைக்கூட பேணிப்பாதுகாத்து உணவு அளிக்கின்றன.
மானுக்கு பசுமாடு பால் ஊட்டுகிறது. கோழி, மயில் குஞ்சுகளை கூட்டிக்கொண்டு இரைதேடுகிறது.
சிங்கம், புலி மான்குட்டி, காட்டெருமைக்குட்டி, குரங்குக்குட்டியோடு விளையாடித்திளைக்கின்றன,
ஆனால் ஆறு அறிவு படைத்த தாய் தன்குழந்தையை குப்பைத்தொட்டியில் போடுவாள். தந்தை தன் குழந்தைகளைக்கைவிட்டு இன்னொரு பெண்ணோடு
ஓடிவிடுவான். ஏன் இப்படிதோழி?
House Crow snap: Courtesy to my chum N. Radhakrishnan
$ You all knew koel is a
Brood-parasitic Bird.
No comments:
Post a Comment