Thursday, May 2, 2013


Student Earner
Earn while Learn

          ஒரு அதிகாலைப்பொழுது. பறவைகளை ரசிக்க மருதமலை மலைப்பாதையிலேயே நானும் மோகனும் நடந்துபோனோம். கண்ணில் பட்டது என்னவோ அடிக்கடி வெண்புருவ சின்னான் (White Browed Bulbul)
மட்டும். பச்சைவாயன்(Malkoha) தலைமறைவு வாழ்க்கையில் இருப்பது போல் எங்களைப்பார்த்தால் போதும் மலைக்கொடிகளின் உள்ளே மறையும். முதல் நாள் மழையில் மண்ணின் கீழே உள்ள பூச்சிகள் வெளிவந்தும், பறவைகள் பூச்சிகளைப்பிடிக்க வரவில்லை. எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. திரும்ப வரும்போது படிக்கட்டுகள் வழியே வரும் போது ஆறாம் வகுப்பு மாணவன் சக்திவேல் கண்ணில் பட்டான்.அவன் தேர்வு விடுமுறையில் கொஞ்சமானாலும் சம்பாதிக்கலாம் என நல்ல எண்ணத்தோடு வீட்டிலிருந்த எடை மெஷினை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு மருதமலை வந்துவிட்டான். கீழே விரிப்பு, காசுகளைப்போட ஒரு டப்பா என பக்தர்கள் ஏறி, இறங்கும் படிக்கட்டு ஓரம் அமர்ந்து விட்டான். உபயோகமான வழியில் பொழுதும் போகும், சிறிதளவு காசும் கிடைக்கும். அவனுக்கு பத்து வயது, என்ன பொறுப்பு!
                                                                                                           White Browed BulBul   
         



















          



          இது போல் ஒரு பையன் எனது இல்லம் வந்து, ‘அம்மா, என்னை வெய்யிலில் ஊரைச்சுத்தாம வீட்டு வேலை எதாவது செய்து சம்பாதி என அனுப்பீட்டாங்க. தண்ணித்தொட்டி கழுவணுமா சார்?’ எனக்கேட்டான். அப்போது என்வசம் வேலை இல்லாததால் மனம் சங்கடப்பட்டது. இது மாதிரிஇளைய பாரதம் உருவாகவேண்டும்.

No comments:

Post a Comment