Tuesday, September 18, 2012

இலக்கியப்பறவை


தேவாரத்தில் செங்கால் நாரை
Painted Stork
(Mycteria leucocephala)

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
                சேருந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல்
     மாலைப்புரிபுன் சடையீரே   -சுந்தரர், ஏழாம் திருமுறை

செங்கால் நாரை (Painted Stork) சங்க காலத்திலேயே தொலைநோக்கி இல்லாமல் பார்த்து, ரசித்து, பக்தி மற்றும் சங்க இலக்கியங்களில் நமது புலவர்கள் பாடியுள்ளனர். சுந்தரமூர்த்திசுவாமிகள் 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருவாரூர் பதிகத்தில் செங்கால் நாரையைப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்பறவைகள் உணவைத்தேடி உள்வலசை போகும். தமிழ் நாளிதழ்கள் இப்பறவையை வெளிநாட்டுப்பறவையென எழுதுவதை திருத்திக்கொள்ளவேண்டும்.
    இப்பறவைகளை நீர்நிலைகளில் காணலாம். இதன் உணவு மீன், நண்டு,தவளை,புழுப்பூச்சிகள் ஆகும்இதற்கு வேறு பெயர்களும் உண்டு. அவைகளாவன;- செவ்வரி நாரை, மஞ்சள்மூக்கு நாரை. பதிகத்தின் பொருள்;- தினைத்தாள் போல மெல்லிய நீண்ட கால்களை உடைய செங்கால் நாரைகள் பறந்து போய் திருவாரூரை விரும்பிச்சேரும். திருவாரூரில் பொன்நிறக்கொன்றை மாலையை தன் சடையில் சூடிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

2 comments:

  1. நான் இவற்றை திருவாரூரில் நான் படிக்கும் கல்லூரியில் (மருத்துவக்கல்லூரி) விடுதிக்கருகில் அடிக்கடி பார்க்கிறேன்..........

    ReplyDelete
  2. வலைப்பூ வருகையாளரே,

    இது நமது பூர்விகப்பறவை. திருவாரூர் சுற்றுப்புறங்களில் நிறைய இப்பறவைகளைக்கண்டு ரசிக்கலாம். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி.
    -சின்ன சாத்தன்

    ReplyDelete