உள்ளே போவதற்கு முன்னம்….எனது நூல் “Diary on the nesting behavior of Indian Birds” amazon.in – on line-ல் கிடைக்கிறது. இது ஒரு மாறுபட்ட பறவை புத்தகம். 300 இதுவரை நீங்கள் பார்த்திராத பறவை புகைப்படங்கள்.
காகத்தின் குறும்புத்தனம்
சென்ற
வாரம் வழக்கம் போல் செலக்கரச்சலிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது, எனது காலனி நுழைவில்
வித்தியாசமாக ஒன்றை கண்ணுற்றேன். மின்சாரம் செல்லும் கம்பியில் உயரமாய் மூன்று ஆட்டுக்கால்கள்
ஒரு நெகிழியில் தொங்கிக்கொண்டிருந்தன. எப்படி? என நினைத்தபோது காகத்தின் குறும்பாக
இருக்கலாமென ஊகித்தேன். இப்படியும் நடக்குமா? எனவும் ஐயமாயிருந்தது. ஓய்வு பெற்ற ஒரு
ஆசிரியர் அதற்கு விடை பகர்ந்தார். மாடியில் ஒரு சிறுவன் சக்தியற்று இருக்கான் என்று
ஆட்டுக்கால் சூப் கொடுக்கலாமென ஆட்டுக்கால்
வாங்கி வந்து மாடி சிட் அவுட்டில் வைத்ததை
இந்த சில்மிஷ காகம் தான் உண்ணலாமென அத்தனை கணமானதை தூக்கிவந்து, ஒயரில் அமர அந்த நெகிழி
மேல் முறுக்கிவிட்ட கம்பியில் மாட்டிக்கொண்டது. காகமும் உண்ணமுடியவில்லை. சவலையான பையனும்
சூப் குடிக்கமுடியவில்லை. நீங்களே பாருங்கள்!
புகைப்படத்தைப்பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? எனது வாசகர்ளே!
காகம்
மாதிரி குறும்புத்தனத்தையும், தோட்டிவேலை செய்வதையும் பறவையில் பார்ப்பது அரிது. மாட்டின்
மீது சவாரி செய்வது, அதன் உடலின் மீது உள்ள பூச்சிகள், காது குடைவது, மற்றும் நீங்கள்
புகைப்படத்தில் காண்பது உட்பட……….
Crows are of course the naughtiest of all the birds. These pictures did make me laugh. Very beautiful!
ReplyDeleteDear Reader of blog,
DeleteMy book "Diary on the nesting behaviour of Indian Birds" have recorded more mischief of House Crow. Order this book thro' on line: amazon.in or e-mail me sukubird@gmail.com