ராமச்சந்திரா குளம்
நானும் நீயும் பாடலாம் Great pied Wagtail |
குளத்தில் சிற்றலைகள் |
இந்தக்குளம் சூலூரிலிருந்து செங்கத்துறை போகும் வழியில் அலாதியான குளம். கண்மாய் தடுப்பில் குளத்து நீர் நிற்கும். கண்மாயின் கிழக்குப்புற தடுப்புச்சுவரில் அமர்ந்து தவம் செய்தவாறு பறவைகளைப்பார்த்து
பரவசம் கொள்வேன். முன் காலத்தில் ராமச்சந்திரன் என்ற ஒரு ஐயர்
இருக்க, அவருக்கு பட்டயமாக இதைச்சுற்றிய நிலபுலன்களை அரசு கொடுத்தது.
இந்தியத்திரு நாடு போல எந்த நாட்டிலும் ஆற்றிலும், குளத்திலும் இப்படி சாக்கடை கலப்பதில்லை. சூலூர் குளம்
நிறைந்து, சின்னக்குளம் நிறைந்து பிறகு இந்தக்குளத்துக்கு வரும்.
நான் அபாக்யவான், எனது முன்னோர் இப்படிப்பட்ட சாக்கடை
கலக்கும் குளங்களைப்பார்க்கவில்லை. இந்தக்குளத்தைச்சுற்றி உள்ள
முட்காட்டு பூமியில் அமர்ந்து எழுந்து பறக்கும் கருப்பு வயிற்று கல்கெளதாரிகளப்
(Black bellied Sandgrouse) பார்க்கலாம். முக்குளிப்பான்கள்
நீர் மேற்ப்பரப்பில் ரயில் விடும். நீர் சறுக்கிப்பூச்சிகள்
(Water skatter) நீர்த்தோல் மேல் கோலமிடும். இந்தக்குளத்து
சூரிய அஸ்தமனம் அழகாக இருக்கும். சூரியன் கலங்கல் நீர் எனப்பாகுபாடு
காட்டதல்லவா!
நணரோடும், தோழியோடும் பறவைகளைப்பார்த்து
மகிழ்ச்சி கொள்ள தேர்ந்தெடுத்தால் இந்தக்குளத்தைத்தான் தேர்வு செய்வேன். பல சமயம் நானும் கண்மாயும் தனித்தே இருந்து மெளனமாக இருப்போம். பலபோது வலசைப்பறவைகளைப் பார்த்து வியப்படைந்துள்ளேன். நீர் கால்பங்கிருந்தால் நின்று இரைபிடிக்கும் (Waders) நிறையப்பறவைகள் வரும். கண்மாய் சரிவில் வாலாட்டி ஜோடி(Wagtail)
மற்றும் உள்ளான்கள்(Common Sandpiper) சறுக்கி
வரும் அல்லது சறுக்கி ஏறும்.
சில போது பறவைகளைப்பற்றி எழுதிய கவிதைகளை நானே மெட்டு அமைத்துப்
பாடுவேன். என் பறவை குருநாதர் ரத்னம் வாயிலிருந்து
பாராட்டுதல் வாங்குவது கடினம். இருந்தும் கொண்டலாத்தி(Hoopoe)
பற்றி நான் இயற்றிய பாடலை நான் பாட ரசித்துப்பாராட்டினார். தோழி கைதட்டுவாள். நண்பர் தலையசைப்பார். DKM
College for women, Vellore – கல்லூரியில் மாணவிகளுக்கு பறவையும் சுற்றுச்சூழலும்
என்ற வகுப்பு எடுக்கும் போது, மாணவிகள் வற்புறுத்த இரண்டு வரிகள்
பாடினேன். இதற்கு இசை அமைத்து முகநூலில் ஏற்றலாம் என இருக்கிறேன்.
எனது முகநூல் முகவரி; http://www.facebook.com//Sukumar Arumugam.988. அதற்கு முன்பு சில வரிகள்;-
கூப்…கூப்….கூப்…..
எனப்பாடியே
எனை மயக்கியது நியாயமா?....
கூப்…கூப்….கூப்….
இந்த ராகத்தை
யாருனக்குச் சொல்லியதோ…..
No comments:
Post a Comment