சங்க இலக்கியத்தில்
சுவையூட்டும்
பறவை கவிதை
புனல்ஆடு
மகளிர் இட்ட பொலங்குழை
இரைதேர்
மணிச்சிரல் இரைசெத்து எறிந்தென
புள்ஆர்
பெண்ணைப் புலம்புமடற் செல்லாது____-பெரும்பாண்ஆற்றுப்படை (312-314)
சங்க காலத்தில் சிறுகுழையெனும்
காதணிகள் மகளிர் அணிந்திருந்தனர். துவக்க காலத்தில் இயற்கையில்
கிடைத்த தாவரங்களையும், செடிகொடிகளையும், மலர்களையும் ஆபரணங்களாக அணிந்தனர். காதில் தளிரை அணிந்தனர்.
அதனைக் குழை என்றனர். காதில் பூ இதழ்களை அணிந்தனர்.
விதைகளைப் போன்ற பொருள்களைக் காதில் அணிந்தனர். பூ இதழ்கள் தோடு என்றனர். விதைகளை காழ், மணி மற்றும் மேகலை என்றும் அழைத்தனர்.
மேலே குறிப்பிடும் மூன்று
வரிச்செய்யுளைப் படித்தீர்களா? அருவிநீரில் குளிப்பதற்கு முன்பு,
மகளிர் தங்கள் காதுகளிலிருந்த குழையினை கழற்றி கரையில் வைத்துவிட்டு
குளிர்ந்த நீரில் குளித்துக்கொண்டிருந்த போது சிறு நீல மீன்கொத்தி அந்தகுழையை மீன்
என நினைத்து அலகில் கவ்விப் பறந்து விட்டதாம். ஆக அந்தக்காலத்தில்
மகளிர் குழை அணிந்திருந்ததையும், அதுவும் மீன் வடிவிலான குழை
அணிந்திருந்ததையும் சங்கப்பாடல் மூலமாக அறிய முடிகிறது.
சிரல் எனில் சிறு மீன்கொத்திப்பறவை.
அதுவும் சிறுநீலமீன்கொத்திப்பறவை(Small Blue Kingfisher)யாயிருக்கும்.சங்க காலத்தில் அதாவது கி.பி 100- 700 லேயே மீன்கொத்திப்பறவையைப்பற்றி அறிந்து
வைத்திருந்திருக்கின்றனர் என்பது அறியமுடிகிறது. இந்த சங்கப்பாடல்
நமக்கு பண்டைய நாகரிகம், பறவை பற்றியதை பதிவு செய்துள்ளது நமக்கு
21-ம் நூற்றாண்டில் காணக் கிடைக்கிறது. பதிவு செய்வது
என்பது எழுதி வைக்க வேண்டும். அதைப்படித்து பின்வரும் சந்ததியினர்அறிய
வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் இலக்கியம் படைப்பதுவும்,
அதைப்படிப்பதுவும் சொற்பமாக உள்ளது.அதை மீட்டு
எடுக்கவேண்டும் யுவன், யுவதிகளே……..உங்களைத்தான்……
No comments:
Post a Comment