GAY BIRDS
SEDUCE OTHER PEAFOWL WITH REAR BEAUTY |
SEDUCE WITH FRONT BEAUTY |
KISSING EACH OTHER |
ஓரினச்சேர்க்கை பறவைகளில்
!!!!!!
அன்று காலை 4.30 மணிக்கு விழிப்புத்தட்ட,
அது ஒரு சனிக்கிழமை நாள். பறவை நோக்கலுக்கு வெகுதூரம் ஸ்கூட்டரில் சென்றேன். ஏமாற்றத்துடன்
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சோளக்கதிர்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. பச்சைக்கிளிகள்
நூற்றுக்கணக்கில் ஆக்கிரோசமாக சோளக்கதிர்களை சூறையாடிக்கொண்டிருந்தன. அவைகளை நிழற்ப்படமெடுக்க
முள்கம்பி வேலியோரம் நின்றேன். ‘சார்! அங்கே பாருங்க! மயில் தோகை விரித்து ஆடுது.’
என ஒரு பத்து வயதுப்பையன் சொல்ல, அவன் காட்டிய திசையில் பார்த்தேன். இரண்டு ஆண்மயில்,
அதில் ஒன்று இன்னொரு ஆண் மயிலுக்கு தன் வனப்பான தோகையை விரித்துக்காட்டி ஆடிக்கொண்டிருந்தது.
ஆண்மயிலுக்குத்தோகையிருக்கும்.
கழுத்து நீல நிறம். பெண் மயிலுக்கு பச்சை நிறம். தோகையிருக்காது. இதில் ஒரு ஆண் மயிலுக்கு
சிறிதளவு தோகையிருந்தது. தோகை விரித்தாடிய மயில் தன்னருகில் இருந்த ஆண் மயிலுக்கு பின்னழகு,
முன்னழகு என விடாமல் அதையே காட்டி, சுற்றிச்சுற்றி வந்தது. இதெப்படி சாத்தியம்? கொஞ்ச
நேரத்துக்குப்பிறகு தோகை விரிக்காத ஆண் மயில், தோகை விரித்தாடிய மயிலின் கழுத்தை தனது
அலகால் கோதியது. மறுநாள் அங்கு சென்று கவனித்த போது அந்த இரு ஆண்மயிலும் இணையாக உலவிக்கொண்டிருந்தன.
தூரத்தில் ஒரு பெண்மயில் இரை தேடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்மயில்கள் மறுநாளும் ஒன்றுக்கொன்று
பிரியாமல் உலவிக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது. இன்றும் தோகையைவிரித்து
அருகிருந்த ஆண் மயிலை மயக்கியது மேலும் வியப்பைத் தந்தது. இவற்றை முதல் நாள் காமெராவில்
பதிவு செய்தேன்.
மூத்த பறவை நிபுணர், நண்பர் ராமச்சந்திர
மூர்த்தியை கருத்துக்கேட்ட போது, ‘இது போல் நடக்க வாய்ப்புண்டு. சூழல் தான் காரணம்.
மனிதனுக்கு முந்திய பரிணாம நிலை பறவை. மனிதர்களில் முறையற்ற உறவு போல் gay,
Lesbian என்பது விலங்குளில், உள்ளது.பறவைக்கு ஏன் இருக்காது? Discovery channel,
National Geography channel போன்றவை இரவு 11 to 12 மணிக்கு இந்த மாதிரி விலங்குகளுக்குள்
இருக்கும் பால் மாறிய உறவை சில சமயம் ஒலி பரப்பியதை நான் பார்த்திருக்கிறேன்.’ என்றார்.
அடுத்து பேராசிரியர் நண்பர் சேகரிடம்
கருத்துக்கேட்ட போது, பறவையிலிருந்து மனிதன் தோன்றினான். பரிணாம வளர்ச்சியில் அடிப்படைப்
பதிவுகள் அப்படி அப்படியே இருக்கின்றன. மனிதன் ஓரினச்சேர்க்கை சூழல் காரணமாகவும், பாலுணர்வு
மிகைப்படவும், மாற்று பாலினம் அரிதாக இருக்கையில் ஓரினப்பாலுணர்வு முறையற்றதாகிலும்
அதில் விழுந்து விடுவது உண்டு. Reason is excess secretion of Neuro endocrime
related to sexual relationship. பறவைகள் இதற்கு விதி விலக்கல்ல.
“Anyway, your probe on this peculiar subject
related to birds and photos are quite rare and interesting” எனப்பாராட்டினார்.
இந்த வலைதளத்துக்கு வருபவர்கள்
தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment