Kentish Plover flocks in Adayar estuary
(Charadrius alexandrinus)
அடையார் முகத்துவாரத்தில் சிறிய உப்புகொத்திகள் |
In flight a narrow white wing-bar and prominent white sides of tail distinctive-Dr. Salim Ali |
முகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு கட்டியிருக்கும் கட்டிடங்கள் |
அழகானதொரு கோவா கடற்கரை மணல்வெளியில் ........... |
சிறிய உப்புக்கொத்தி-
மணல் கோழி
சிறிய உப்புக்கொத்திகளை நான்
கோவாவின் ஒரு அழகான கடற்கரையில் முதன்முதலாக சந்தித்தேன். இவை நமது நாட்டுப்பறவைகள்.
மணலில் விளையாடியும், புதைந்தும், குடுகுடு வென ஓடியும் அழகு காட்டும் குருவி (+) பரிமாணப்பறவைகள்.
இவற்றினை குழுவாகத்தான் பார்க்கலாம். பலர் இவற்றை மோதிரக்கோழி(Little Ringed
Plover)யென சத்தியமாக எண்ணி விடுவார்கள். இரண்டுக்கும் வேறுபாடு; மோதிரக்கோழிக்கு கழுத்தில்
இடைவெளியற்று,வளையமிட்ட கருப்பு, நெற்றியில் கருப்புப்பட்டை. இது இருந்தால் அது கழுத்தில்
மோதிரமிட்ட கோழி என அறிந்து கொள்ளலாம்.
சிறிய உப்புக்கொத்திக்கு முன்
நெற்றியில் வெண்கோடு,குறுகிய கண் தீற்றல், மார்பில் சிறு கருப்புப் பட்டை. இப்படி இருந்தால்
அது மணல் கோழி. மலையாளத்தில் தமிழை விட பொறுத்தமான பெயர்கள் பறவைகளுக்கு சூட்டியுள்ளனர்,
என்பதைச் சொல்லத்தான் வேண்டும். தொந்தரவு என உணர்ந்தால் குழுவாகப்பறந்து மீண்டும் மணலில்
அமருமிவை பறக்கும் போது சன்னமாக ட்ர்ர்ர் என இரு முறை கத்தி, ’எந்திரிங்கடா,
பறப்போம், மனுஷன் எவனோ வர்ரான்’ எனப்பறப்பது ஒரு கவிதை. இருவிடலைப்பையன்கள் அப்படி
அடையார் முகத்துவாரத்து மணல்வெளியில் நடந்து வந்த போது தான், பறந்து போகும் நிலை நிழற்ப்படம்
சாத்தியமானது.
இவை மணல் குழிவை அலை தொடாதவாறு
ஏற்படுத்தி முட்டைகளை வைக்கும். அல்லது காய்ந்த ஆற்றுப்டுகையில் தாவரங்களுக்கிடையே
வைக்கும். முகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு இந்த மாதிரி ராட்ச்சத்தனமாக(ன)
கட்டிடம் கட்டலாமா? நீச்சலடிப்பவர், மீன்பிடிப்பவர், பிக்னிக் மக்களென பறவைகளை இறங்கவிடாமல்
செய்தது பரிதாபம். சென்ற காலங்களில் நிறையப்பறவைகள் காணமுடிந்தது. இப்போது நான் பார்த்தது;
Small green Bee-eater(1), Curlew(1), Common Sandpiper(1). Little Egrets (5) மட்டுமே.
எனக்கு நிறைய ஏமாற்றம்.
சிறு தானியங்கள் அறுவடைக்குப் பின் கூட்டம் கூட்டமாக காடுகளிலு காணப்படும் வகை குருவிகளா?
ReplyDeleteசார் வணக்கம். நீங்கள் சொல்லும் பறவைகள் ஆங்கிலத்தில் முனியா என்றும் தமிழில் சில்லை என்றும் சொல்வார்கள. இந்தப்பறவைகள் கடற்கரை மணலிலும், ஆற்று மணலிலும் திரிந்து சிறு சிறு பூச்சிகளையும், சிறு சிப்பிகளையும் தேடி உண்ணும் பறவைகள் -சுகுமார்
Deleteமென் பொருள் ஏற்றுமதியுடன் பறவைகளயும் சேர்த்து ஏற்றுமதி செய்து விட்டோம்!
ReplyDelete