Friday, June 21, 2013

பொரி மைனா (கொனார்க்)
மின் கம்பத்தில் பொரி மைனா கூடு (கொனார்க்) 
                                                 TRAVEL 

புரி, தேர் வீதியில் காளை 

Pond Heron collects nest material in a tree (Puri)


யாத்திரையில் காணுயிர்
   இந்தியகிழக்குக்கடற்கரை ஓரமாக யாத்திரையின் போது   
   நான் பார்த்த பறவைகள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமானால் பொரி மைனா மற்றும் பிணந்திண்ணிக்கழுகு பற்றிச்சொல்லலாம். விசாகப்பட்டிணம் விரைவு ரயிலில் சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம் சென்ற போது ரயில் இரவு முழுக்க ஓடி, காலை விடிந்து ஆந்திரப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு சிறிய நீர் நிலையோரம் மூன்று பிணந்திண்ணிக்கழுகுகள் (Vulture) உட்கார்திருந்த்தைப்பார்த்தேன். என்ன வகைக் கழுகு என்று ரயில் வேகத்தில் தெரியவில்லை. ஆந்திரா, ஒடிசாவில் பொரி மைனா நிறையக்கண்ணில் பட்டது. கோனார்க் கோவிலிலிருந்து வெளியில் வந்த போது மின்கம்பத்தின் மேல் பொரி மைனா கூடு வைத்திருந்ததைப்பார்த்தேன். ஜோடி மைனா அமர்ந்திருந்தது.அதிகமான கூட்டுப்பொருட்கள் காணப்பட்டது. இலைகள், தாவரக்குச்சிகள், புல், குப்பைகூளம் என ஒழுங்கற்ற உருண்டையில் இருந்தது. 15 to 25 அடி உயரத்தில் மரத்தில் ஒரு கூடு பார்த்தேன். Sturnus sordidus என்ற வகை பொரி மைனா சிறு வண்ண மாறுபாட்டில் இந்த வடகிழக்குப்பகுதியில் இருக்கும் என Dr. சலிம்அலி சொல்கிறார். சேறு, ஈரம், குப்பைகூளம், புல்வெளி இதற்கு பிடித்தமான பகுதிகள். நம்மூர் மைனா(Indian Myna) இந்தப்பகுதியில் உள்ளது. அதிகளவில் குரல் எழுப்புகிறது. பறக்கும் பொழுது அடிவயிறு வெள்ளையாகத்தெரிகிறது.
            முகம் கருப்பும், நீண்டவாலும் கொண்ட பெரியகுரங்கு ஒன்று ரயில் ஆந்திர எல்லையில் ஓடிக்கொண்டிருக்கும் போது காலை வேளையில் அறுவடை செய்த வயல் வெளியில் வேகமாக ஓடியதைப்பார்த்தேன். அந்த வகை குரங்கு மற்றொன்றை புவனேஷ்வர் கந்தகிரியில் பார்த்தேன்.
            ஒடிசா, புரியில் தேர் வீதி உலவும் காளைகள் குட்டையாக இருந்து வியப்பை ஊட்டின. தென்மேற்குப்பருவ மழை ஆரம்பித்து விட்டதால் பறவைகள் இனப்பெருக்கத்தைத்தொடங்கிவிட்டன. புரி Golden Beach பகுதியில் தங்கியிருந்தோம். அங்குள்ள மரங்களில் காகம், குருட்டுக்கொக்கு கூடுகள் பார்த்தேன். எங்கு சென்றாலும் நம்மைச்சுற்றியுள்ள காணுயிர்களைக்கண்டு ரசிக்க வேண்டும்.

2 comments:

  1. In Andhra, near lakes and ponds I have noticed Egyptian vultures quenching. They are the same birds that visited Thirukkazhugukundram. The are intelligent to use pebbles to break the eggs.

    ReplyDelete
    Replies
    1. Dear friend,

      Thanks for information. Blog viewers! Please note the point.- Chinna Sathan

      Delete