மயில் உள்ளான்
Painted Snipe
(Gallinago gallinago)
சூலூர்
ராமச்சந்திரா குளத்தில் இந்த வலசைப் பருவத்தில் பார்த்தேன். ஜோடியாக உலாவியது.
இவை உள்வலசை போகும். நான் தனிமையில் இருந்தேன்.
ஓ! மயில் உள்ளானே!
நீயும் நானும்,
ஊருக்கு வெளியே இந்த அலாதியான,
அழகான,
குளுமையான குளத்தில் இருந்தது மகிழ்ச்சி பொங்கிய நிமிஷங்கள்.
புள்ளும்,
புதரும்,
சேறும் நிறைந்த இடத்தில் நீ தேடுவது புழு,
நத்தை,
தாவரத்தண்டு தானே!
மூக்கா இது!
நீளமான மூக்கு,
சேற்றில் விட்டுக்கிளறத்தானே!
உன் இனத்தில் பெண் ராஜ்யமாமே!
குரல் போத்தலில்
(bottle)காற்று ஊ துவது போல என்ன இனிமை!
புகைப்படத்தில் பார்ப்பது பெண்.
ஆண் தான் பறவையினத்தில் அழகு.
ஆனால் இந்த இனத்தில் நேர் மாறாக இருக்கும்.
பெண் பறவை பல ஆண் பறவைகளுடன் உறவு வைக்கும்.
இவை லங்கா மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் உலவும்.
மீண்டும் எப்போது சந்திப்போம்?
interesting!
ReplyDelete
ReplyDeleteDear blog visitor,
Thanks for comments. keep on visit my blog. I will place more interesting about Nature.
-Suku