Plain banded awl வண்ணத்துப்பூச்சி
(Hasora vita)
இது ஸ்கிப்பர்
குடும்பத்தைச்சார்ந்தது.
அதி காலையில் சூலூர் குளத்தின் வடக்குப்புற ‘அவன்யு’---வில் சந்தித்த ஸ்கிப்பர் வண்ணத்துப்பூச்சி பற்றி சொல்கிறேன். இதை சிலர் மாத் (moth) என தவறாகக் கனித்து விடுவர். 'மாத்' எனும் வண்ணத்துப்பூச்சிஇனம் இரவு நேரங்களில் உலாவும்.கொஞ்சம் பனி விழும்
போது வண்ணத்துப்பூச்சிகளுக்கு சுறுசுறுப்பு குறைவு, ஏனெனில் சூரியவெப்பம்
அதன் உடம்பில் ஏறவில்லை. அந்த நேரத்தில் காமிரா கண்களுக்கு மாட்டும்.
இந்த ஸ்கிப்பர் ஒரு அங்குளம் தான்
இருக்கும்.மலர் தாவரத்தில் அமர்ந்திருந்த போது எடுத்தேன். இத்
தாவரம் இந்த ஸ்கிப்பருக்கு உணவுத்தாவரம். இந்த இனம் அதிக சுறுசுறுப்பு பறத்தலால்
இப்பெயரை வைத்து விட்டனர். ஸ்கிப்பர் பொருத்தமான பெயர். இது அதிகாலை மற்றும் அந்தியில் ‘துறுதுறு’. இவைகளை சந்திக்க அதன் உணவுத்தாவரங்களைக்கண் வையுங்கள். மேற்குத்தொடர்ச்சி
மலையோரப்பகுதிகளில் காணலாம். வண்ணத்துப்பூச்சிகளுக்கு இன்னும் தமிழில் பெயர் பட்டியல்
இல்லை. முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி என நான்கு அவதாரம் எடுக்கிறது.
எனக்கு ஏன் பறவைகளையும், வண்ணத்துப்பூச்சிகளையும் பிடிக்கிறது? அவைகளின் அழகு வண்ணங்களும்,
நளினமான அசைவுகளும், அவற்றின ரம்மியமான வாழிடங்களும், கூவும் பாடல்களும்(பறவையில்)
மனதை மயக்குகின்றன. இவை பூமியெனும் கிரகத்தில் உலாவும் தேவதைகள். ரசனை இயற்கை மீது
இருக்க வேண்டும். நீங்கள் கண்டு பிடித்த உபகரணங்கள் மீது அல்ல!
No comments:
Post a Comment