Friday, November 9, 2012

பூச்சிகள் ராஜ்ஜியம்


பூச்சிகள் ராஜ்ஜியம்
Scelio


                                                             Scelio

பூச்சிகள் கிட்டத்தட்ட 30,000 வகைகள் இந்தியாவில் மட்டும் உள்ளன. இவைகளில் பெறும்பாலும் தாவரங்களை நம்பி உள்ளன. எனவே விவசாயத்துக்கு கேடு. அதே சமயம் நன்மை பயக்கும் பூச்சிகளும் உள்ளன. நம் சமுதாயம் போலத்தான் அங்கும் உள்ளது. வெட்டுக்கிளிகள் தாவரங்களை உணவாக்கிக்கொண்டு பல்கிப்பெருகுகின்றன. அதனால் பயிர்கள் வளம் குறைகிறது. நம் எதிரிவெட்டுக்கிளிகளின் பெருக்கத்தைக்குறைக்க எல்லாம் வல்ல இயற்கை ஸ்சிலியோக்களைப்படைத்திருக்கிறது. வெட்டுக்கிளிகளை மைனாக்கள் உட்கொண்டு நமக்கு நன்மை பயக்கின்றன. வெட்டுக்கிளிகளுக்கு எதிரி ஸ்சிலியோ. அதனால் ஸ்சிலியோ நமக்கு மைனாவைப் போல  நண்பன். நம் எதிரிக்கு எதிரி நம் நண்பனாகிறான். வெட்டுக்கிளிகள் தாவரங்களில் ஏராளமான முட்டைகளை இடுகின்றன. அந்த முட்டைகளுக்கு ஒட்டுண்ணியாக இந்த ஸ்சிலியோக்கள் உள்ளன. பூச்சிகளின் ராஜாங்கம் நீங்கள் நினைப்பது போல அருவருப்பானது அல்ல. ரொம்பவும் ஸ்வராஸ்யமானது. இதோ நமது நண்பர் ஸ்சிலியோ புகைப்படத்துக்கு முகம் காட்டியுள்ளார்.

2 comments:

  1. சில வகை குளவிகள் சிலந்தியை பிடித்து மண்ணில் புதைத்து அதில் முட்டையிட்டு குஞ்சுகளுக்கு உணவாகுகின்றன!

    ReplyDelete
    Replies

    1. வியக்கவைக்கும் தகவல்!இயற்கை பல உன்னத தகவல்களை தன்னுள் கொண்டுள்ளது.

      Delete