தும்பி
Dragon
Fly
தும்பிகள் மழைக்கு முன்னும், பின்னும் தாழப்பறந்து திரிவதைப்பார்த்து ஆனந்தப்பட்ட காலமுண்டு.இப்போதுகைபேசியைவைத்துக்கொண்டு பேசியவாறு எதிரில் காணும் காட்சிகளை காணத்தவறுகிறோம். தும்பி பிடித்து விளையாடிய காலம் போய் மின்னனு காலமாய் போயிற்று. விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டாலும், தாராள குணம் வளரவில்லை. தும்பியோடிருந்த போது இருந்த மகிழ்ச்சி மாநிடன் கண்டுபிடித்த மின்னனு பொருட்களோடு இருக்கும் போது இல்லை. இயற்கையோடு உறவாடுகையில் உற்சாகமும், ஆரோக்கியமும், மன அமைதியும் கிடைக்கிறது. அது ஏன்? இயற்கை எப்போதும் சரியானது. சிலசமயம் நமக்கு விளங்காது. புதிராக இருக்கும். தும்பிகள் பறந்து, பறந்து கொசுப்பிடித்து உண்ணும்.அதனால் நமக்கு நண்பன். ஆனால் இயற்கையில் கொசு படைக்கப்பட்டது, ஏன்? நம்மில் நல்லவர், கெட்டவர் போல……….. நான் விவசாய பல்கலைக்கழக சமுதாய வானொலியில் (பாகம் 1) பறவைகளைப்பற்றி அக்டோபர் 5-இல் பேசியதை agri portel e community radio programme-ல் இப்போதுகேட்டு மகிழலாமே.
No comments:
Post a Comment