பூநாரை
Greater Flamingo
(Phoenicopterus roseus)
சூலூர் குளத்தில் பூநாரை வந்தது எல்லோருக்கும்
வியப்பு. இது முழு வளர்ச்சி பெறவில்லை. இறகு ஓரங்கள் குங்கும நிறம் இன்னும் வரவில்லை.
ராணே வளைகுடாவிலிருந்து வந்திருக்கலாம். இதற்கு பிரியமானது உப்பங்கழிகளும், கடல் ஓரங்களும்,
ஆனால் நான் பூநாரைக் கூட்டங்களை கூந்தகுளத்திலும் அதன் சுற்று வட்டார சில குளங்களிலும்
பல முறை நண்பர்களோடு பார்த்து ரசித்திருக்கிறேன். இது கோடியக்கரை, கன்னியாகுமரி, இராமனாதபுரம்
பகுதிகளுக்குப் போகவேண்டியது தான். தனது கூட்டத்தோடு சேர்ந்து விடும். அதற்காக பலம்
பெற பொன்னாங்கன்னி கீரை தீடைக்குள் தன் மண்வெட்டி போன்ற அலகை நுழைத்து, நுழைத்து பூச்சி
லார்வா, புழு, சேற்றுக்தாவரங்களின் விதைகள் உண்ணுகிறது. நீலம் புயல் உருவான சமயம் இந்த
இளைஞரை தடுமாற வைத்து, திசை மாற்றியிருக்கலாம். இவை லங்கா, இந்திய துணை கண்டத்தில் உலவும் பறவைகள். பூநாரை பார்க்காத கோவை வாசிகள்
பார்க்க அதிஷ்டமடித்தது. இவை குழு வாகப்பறக்கும் பொழுது ஆஹா! ‘V” வடிவில் போகும். சுவர்க்கம்
இங்கு தான் தோழா! ஆயிரக்கணக்கில் குறை நீருக்குள் இரை தேடும் போது முனகல் ஒலி கேட்டிருக்கிறீர்களா?
பூநாரை கூட்டத்தைக்காண இந்த வலசைப்பருவத்தில் மேலே சொன்ன இடங்களுக்கு விரையுங்கள்.
Sir
ReplyDeleteIndru kaalai sulur kulathil santhithomey?
Ungal photos ellamey mikavum arumai.
Ilaya thalaimuraikku eyarkaiyai patri solli kodukkum ungal muyarchi paarattukkuriyathu.
UNGAL MUYARCHI MENMELUM SIRAKKATTUM
NAAL VAALTHUKKAL!
muthuvel64@gmail.com
Dear Muthu,
ReplyDeleteThanks for visit to my blog and your encouraging words are tonic to me.--Sukumar(Chinna Sathan)