Showing posts with label அரிய காட்சி. Show all posts
Showing posts with label அரிய காட்சி. Show all posts

Friday, June 5, 2015



 இடி விழுந்த இடம்



பூமியில் கத்தி சொருகியது போல் காணப்புடும் இடம் இடி விழுந்து இடம்

            வாழ்நாளில் நான் இடி விழுந்த இடம் பார்த்ததில்லை. நிறையப்பேர் என்னை மாதிரி தான். நான் என் வீட்டருகில் இருக்கும் விஜயவிநாயகர் கோயிலில் இருக்கும் போது நண்பர் பேச்சியண்ணன் பக்கத்துக்காலனி நேரு நகரில் இடி விழுந்ததாகச்சொன்னார். பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்றார். என் வீட்டிலிருந்துதென்கிழக்கு திசையில் ஒரு கி.மீ. தான் இருக்கும். ஆம்! சனிக்கிழமை அதிகாலை நான்கிருக்கும் ‘சடச்சட’ வென செமத்தியான மழை. இடி மின்னல் கர்னகொடூரமாக உருமி அதிர்ந்தது. இரண்டு இடி நிலம் அதிர்வது போல விழுந்தது. மாடியில் தனியறையில் படுத்திருந்த எனக்கு பயம் கவ்விக்கொண்டது. எப்படா! இடிஇடிப்பது ஓயுமென இருந்து பிறகு அரைகுறை உறக்கம்.
ஞாயிறுக்கிழமை பேச்சியண்ணன் இந்தச்செய்தியைச்சொல்ல இடி விழுந்த இடத்தைப்பார்க்க ஆவல் முட்டியது. இரண்டு நீர் உட்கொண்ட மேகங்கள் மோதிக்கொள்ளும் போது மின்சாரம் ஏற்பட்டு முதலில் மின்னல் கண்ணுக்குத்தெரிகிறது. பிறகு காதுக்கு இடி சப்தம் கேட்கிறது. பொதுவாக மக்கள் பயந்து போய் அர்ஜுனா அர்ஜுனா என்று ஜபிக்க ஆரம்பித்து விடுவர். மின்னல் ஒரு விந்தை. அதிலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா? அதிலிருந்து எடுக்க நமக்கு வல்லமை குறைவு. இடி மழையில் காளான்கள் பூமியிலிருந்து மேல் எழும்பி வரும். நீர் இடி நீரைத்தரும். நெருப்பு இடி தீப்பிளம்பு ஆகும். இடி விழுவது இல்லை. நான் சிறுவனாக இருக்கும் போது இடி விழுவது என்றால் ஒரு பெரிய பாறை மாதிரி எதோ ஒன்று வானிலிருந்து விழும் என்று நினைத்திருந்தேன். மிகைபட்ட மின் தாக்கு.
         மின்னல் பூமியை நோக்கி வருவது அதற்கு எதாவது ஒரு பொருள் வேண்டும். தனது சக்தியை வடிய அது பூமியை நாடுகிறது. உயரமான கட்டிடங்கள், மரங்கள் போல இடி தாக்கலாம். உயரக்கட்டிடங்களில் இடி தாங்கி வைத்துள்ளனர். மின்னல் வெட்டி வரும் போது மரங்களுக்கு அடியில் இருக்கக்கூடாது என்கின்றனர். நான் இப்போது தான் மின்னல் தாக்கிய இடத்தைப்பார்க்கிறேன். கத்தியில் துளைத்தது போல ஒரு பிளவு. அதிலிருந்து மின்னல் தாக்கிய சனி அதிகாலையிலிருந்து, அன்று மதியம் வரை நீரூற்று அதன் வழியே வந்து கொண்டிருந்தது. பிறகு நின்று விட்டது. அது வெற்று இடம். வீடுகட்ட யாரோ வாங்கிப்போட்டிருக்கின்றனர். அவர் அங்கு ஆழ்குழாய் இட்டால் தண்ணீர் வற்றாது என்கின்றனர். நல்லவேளை! அந்த மின்னல் தாக்கிய இடத்தின் மேற்குப்புறமும், வடக்குபுறமும் தார்சு வீடுகள். அவை மேல் விழவில்லை.      
             Lightning arrester, Lightning conductor, Lightning rod இவை எல்லாம் மின்னல் கட்டிடம், மின் டவர் ஆகியவற்றைத்தாக்கினால் மின் கடத்தி பூமிக்குள் அனுப்பி விடும். மின்னலில் தான் எத்தனை வகை! lightning எனத்தட்டி வலைதளங்களுக்குப் போய் படித்தால் பிரம்மிப்பாக உள்ளது. உன் தலை மேல் இடி விழ என யாரையும் சொல்ல வேண்டாம். Star watching போல Lightning watch , மழை பெய்யும் போது கவனித்தால் பத்து விதமான மின்னல்களை கண்டு ரசிக்கலாம். ஒரு நாளில் பார்ப்பது அரிது.ஆனால் கண்ணுக்கு யார் உத்திரவாதம்? ஆகவே வலை தளத்திலாவது கண்டு ரசியுங்கள்.

Sunday, April 20, 2014


GAY BIRDS


SEDUCE OTHER PEAFOWL WITH REAR BEAUTY


SEDUCE WITH FRONT BEAUTY


KISSING EACH OTHER





ஓரினச்சேர்க்கை பறவைகளில் !!!!!!

அன்று காலை 4.30 மணிக்கு விழிப்புத்தட்ட, அது ஒரு சனிக்கிழமை நாள். பறவை நோக்கலுக்கு வெகுதூரம் ஸ்கூட்டரில் சென்றேன். ஏமாற்றத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சோளக்கதிர்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. பச்சைக்கிளிகள் நூற்றுக்கணக்கில் ஆக்கிரோசமாக சோளக்கதிர்களை சூறையாடிக்கொண்டிருந்தன. அவைகளை நிழற்ப்படமெடுக்க முள்கம்பி வேலியோரம் நின்றேன். ‘சார்! அங்கே பாருங்க! மயில் தோகை விரித்து ஆடுது.’ என ஒரு பத்து வயதுப்பையன் சொல்ல, அவன் காட்டிய திசையில் பார்த்தேன். இரண்டு ஆண்மயில், அதில் ஒன்று இன்னொரு ஆண் மயிலுக்கு தன் வனப்பான தோகையை விரித்துக்காட்டி ஆடிக்கொண்டிருந்தது.
ஆண்மயிலுக்குத்தோகையிருக்கும். கழுத்து நீல நிறம். பெண் மயிலுக்கு பச்சை நிறம். தோகையிருக்காது. இதில் ஒரு ஆண் மயிலுக்கு சிறிதளவு தோகையிருந்தது. தோகை விரித்தாடிய மயில் தன்னருகில் இருந்த ஆண் மயிலுக்கு பின்னழகு, முன்னழகு என விடாமல் அதையே காட்டி, சுற்றிச்சுற்றி வந்தது. இதெப்படி சாத்தியம்? கொஞ்ச நேரத்துக்குப்பிறகு தோகை விரிக்காத ஆண் மயில், தோகை விரித்தாடிய மயிலின் கழுத்தை தனது அலகால் கோதியது. மறுநாள் அங்கு சென்று கவனித்த போது அந்த இரு ஆண்மயிலும் இணையாக உலவிக்கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெண்மயில் இரை தேடிக்கொண்டிருந்தது. இந்த ஆண்மயில்கள் மறுநாளும் ஒன்றுக்கொன்று பிரியாமல் உலவிக்கொண்டிருந்தது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது. இன்றும் தோகையைவிரித்து அருகிருந்த ஆண் மயிலை மயக்கியது மேலும் வியப்பைத் தந்தது. இவற்றை முதல் நாள் காமெராவில் பதிவு செய்தேன்.
மூத்த பறவை நிபுணர், நண்பர் ராமச்சந்திர மூர்த்தியை கருத்துக்கேட்ட போது, ‘இது போல் நடக்க வாய்ப்புண்டு. சூழல் தான் காரணம். மனிதனுக்கு முந்திய பரிணாம நிலை பறவை. மனிதர்களில் முறையற்ற உறவு போல் gay, Lesbian என்பது விலங்குளில், உள்ளது.பறவைக்கு ஏன் இருக்காது? Discovery channel, National Geography channel போன்றவை இரவு 11 to 12 மணிக்கு இந்த மாதிரி விலங்குகளுக்குள் இருக்கும் பால் மாறிய உறவை சில சமயம் ஒலி பரப்பியதை நான் பார்த்திருக்கிறேன்.’ என்றார்.
அடுத்து பேராசிரியர் நண்பர் சேகரிடம் கருத்துக்கேட்ட போது, பறவையிலிருந்து மனிதன் தோன்றினான். பரிணாம வளர்ச்சியில் அடிப்படைப் பதிவுகள் அப்படி அப்படியே இருக்கின்றன. மனிதன் ஓரினச்சேர்க்கை சூழல் காரணமாகவும், பாலுணர்வு மிகைப்படவும், மாற்று பாலினம் அரிதாக இருக்கையில் ஓரினப்பாலுணர்வு முறையற்றதாகிலும் அதில் விழுந்து விடுவது உண்டு. Reason is excess secretion of Neuro endocrime related to sexual relationship. பறவைகள் இதற்கு விதி விலக்கல்ல.
 “Anyway, your probe on this peculiar subject related to birds and photos are quite rare and interesting” எனப்பாராட்டினார்.

இந்த வலைதளத்துக்கு வருபவர்கள் தங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.  

Sunday, March 31, 2013



Feeding to Chicks



நல்ல காகம் தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுதல்
               (கண்ணுபடப்போகுதய்யா!)

நல்ல காகம் என்று ஏன் நாமம் சூட்டினர். நம் ஊரைச்சுத்தம் செய்வதால் நம் முன்னோர் இப்படி பெயர் வைத்தனர். இவனை மாதிரி புத்திசாலி, பறவைகளில் இல்லை எனலாம். இவன் கூடு வைக்க இப்போது சாலையோர மரங்களில்லை. நாம் சொகுசாக காரில் பிரயாணிக்க வெட்டி விட்டோம். இவனை மாதிரி குறும்பு செய்ய பறவைகளில்ஆளில்லை. பேட்டை ரவுடி. பறவை கூடு காலனிக்குள்ளே பறந்து ரவுடித்தனம் செய்வான். ஆனால் இதன் கூட்டுப்பக்கம் ஆட்கள் நாடமுடியாது. வீட்டுமுன்புற வேம்பு மரத்தில் கூடு இருந்த போது, பக்கத்து வீட்டு அம்மாள் அதிகாலை கோலம் போடும் போது புட்டத்தை அலகால் பதம் பார்த்து விட்டது.என் மனைவி தலையில் ரோஜாப்பூ சூடிச்சென்றபோது அதை வழிப்பறி செய்த சில்மிஷத்தை என்னவென்று சொல்வேன்? பருந்து, கழுகு, குயில், ஆந்தை என எந்தப்பறவையையும் சகட்டுமேனிக்கு துரத்தும் பராக்கிரமத்தை எப்படிச்சொல்வது? மாடு, ஆடு போன்ற கால்நடை மேல் ஓசிப்பயணம் இவனுக்குப்பிடிக்கும். மழைநீர் வடிகுழாயில் பிஸ்கட் ஒளித்து வைத்து பிறகு உண்ணும் புத்திக்கூர்மை, குழாயில் ஒழுகும் நீரை குழாயில் அமர்ந்தவாறே லாவகமாக  பருகும் அழகும், முக்காலியில் இருந்த அலுமினிய பாத்திரத்தில் நீர் எட்டாத போது, தன் எடையால் அசைத்து நீர் பருகிய அறிவும் என காகத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
எனது நூல் ‘Diary on the nesting behavior of Indian Birds” (pl.visit: www.nestingbook.webs.com) வெளியிடும் போது இந்த மாதிரி படம் எடுக்க எனது இல்ல ‘சிட் அவுட்’ டிலிருந்து முயன்றும் முடியாது போனது. எனது மொட்டையடித்த மண்டை காகத்திடம்இரண்டு  கொட்டு வாங்கியது தான் மிச்சம். இப்போது எனது ஆஸ்தான போட்டோகிராபர் நண்பர் N. ராதாகிருஷ்ணன் இப்படி படம் எடுத்து மெச்ச வைத்து விட்டார். அவரை மனமார பாராட்டலாமே, தோழர்களே!

Monday, February 25, 2013

 Asian Pied Starling- Rare Bird in Tamil Nadu



 ஏரி, குளங்களை நீ எப்படி நாறடிச்சாலும்
                       நாஙக
 வாழ்ந்து காட்டுவம்டா!

Pond Heorn's Rafts to catch prey are Human used and thrown tyre and foot wear sole into the Pond
பொரி மைனா                 (top picture)                                          
Asian Pied Starling (Sturnus contra)

இந்த வகை மைனாவை நான் பல வருடங்களுக்கு முன்பு புது தில்லியில் சுற்றுலாப்பயணிகள் கூடும் இடத்தின் புல்வெளியில் பார்த்தேன். இந்த மைனா நிழற்படம் அரக்கோணம் ஏரியில் எடுத்தது. சலிம் அலி நுலில் இது ஆந்திராவைத்தாண்டாது எனக்கண்டேன். ஆனால் என்னைப்பார்க்க ஆந்திர எல்லையைக்கடந்து ஒரு ஜோடி பொரி மைனா மட்டும் அரக்கோணம் வந்தது அதிசயம் தான். இது அவர் சொல்வது போல் கழிவு கடாசப்படும் ஏரியை விரும்பி வருவது இன்னும் ஆச்சர்யம்.இது வானம்பாடியிடம் அபகரித்த பாடலைப்பாடுவது உன்னத ஆச்சர்யம். அடுத்த முறை பாடச்சொல்லி நான் ‘ஒன்ஸ் மோர்’ சொல்லவேண்டும். இதுவரை பார்க்காதவர் இதன் அழகில் மயங்கலாமே!

Monday, February 18, 2013






Rare snap


தும்பி முட்டையிடுதல்
           Dragonfly lays eggs
               









தும்பி முட்டையிடுவதை பார்த்திருக்கிறீர்களா? நீரில் முட்டையிடும். அவை பொரிந்து லார்வாக்களாகும். பிறகு லார்வாக்கள் மீன்களுக்கு உணவாகிப்போகலாம். தப்பிப்பிழைத்தவை சிறகு முளைத்துப்பறக்க ஆரம்பிக்கும் போது, ஈ பிடிச்சான்கள்(Bee Eaters) குளத்தோர மரக்கிளைகளில் காத்திருக்கும். கூட்டம், கூட்டமாக தும்பிகள் குளநீர்ப்பரப்பை விட்டு வெளியேறும் போது காத்திருக்கும்  ஈ பிடிச்சான்கள் ‘டைவ்’ அடித்துப்பறந்து வட்டமிட்டு தும்பிகளை பிடித்து மரக்கிளைகளில் அமர்ந்து தும்பி சிறகை உதிர்த்து உண்ணும் அழகை எம் சூலூர் குளத்தில் கண்டு ரசித்த காட்சிதனை மறக்கமுடியுமா? தும்பிகள் பறந்தவாறு கால்களாலேயே சிறு பறக்கும் பூச்சிகளைப்பிடித்து உண்ணும். இப்படி இயற்கையின் வினோதங்களை ரசிக்கவோ படிக்கவோ விரும்பாத மனிதன் நல்ல மானிடப்பிறவியை வீணாக்குகிறான். மழைக்கு முன்னும், பின்னும் சிறகு தோன்றி மாலை மஞ்சள் வெளிச்சத்தில் தும்பிகளின் சிறகடிப்பை ரசிக்க ரசனை வேண்டும் தோழா!

Friday, September 14, 2012

அதிசயப்பறவை



வெள்ளைக்காகம் (White Crow)

‘வெள்ளக்காகா பறக்குது’ என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? இப்போது நம்பித்தான் ஆகவேண்டும். புகைப்படமே நிரூபணம். இந்த காகம் (14.09.12) அன்று காலை கோவை, சிங்காநல்லூர் குளத்துக்கு கிழக்குப்புறம் உள்ள கால்வாய் ஒட்டியுள்ள தென்னைமரங்களிடையே காணப்பட்டது. நண்பன் மோகன் தான் இதைக்காட்டினான், இந்த புகைப்படம் எடுக்கவும் உதவினான்.இதை அல்பினோ (albino) எனச்சொல்வர். ஜினில் பதிந்துள்ள நிறமிகள் தொடர்பான உத்தரவு, நிறமி சேர்க்கையின் போது தவறி விட்டது. விலங்குகளிலும், ஏன் மனிதஇனத்திலும் இது நிகழ்வதுண்டு. காகம் அமர்ந்த நிலையில் வெள்ளைக்கோடு தெரிகிறது பார்த்தீர்களா?. பிறகு இறகு விரித்துப்பறந்த நிலையில்  வெள்ளைக்காகம் அதிசயப்படவைக்கிறது. மற்ற காகங்கள் இதை ஒதுக்குவது தான் வேதனையளிக்கிறது.