Friday, September 14, 2012

அதிசயப்பறவை



வெள்ளைக்காகம் (White Crow)

வெள்ளக்காகா பறக்குதுஎன்று சொன்னால் யாராவது நம்புவார்களா? இப்போது நம்பித்தான் ஆகவேண்டும். புகைப்படமே நிரூபணம். இந்த காகம் (14.09.12) அன்று காலை கோவை, சிங்காநல்லூர் குளத்துக்கு கிழக்குப்புறம் உள்ள கால்வாய் ஒட்டியுள்ள தென்னைமரங்களிடையே காணப்பட்டது. நண்பன் மோகன் தான் இதைக்காட்டினான், இந்த புகைப்படம் எடுக்கவும் உதவினான்.இதை அல்பினோ (albino) எனச்சொல்வர். ஜினில் பதிந்துள்ள நிறமிகள் தொடர்பான உத்தரவு, நிறமி சேர்க்கையின் போது தவறி விட்டது. விலங்குகளிலும், ஏன் மனிதஇனத்திலும் இது நிகழ்வதுண்டு. காகம் அமர்ந்த நிலையில் வெள்ளைக்கோடு தெரிகிறது பார்த்தீர்களா?. பிறகு இறகு விரித்துப்பறந்த நிலையில்  வெள்ளைக்காகம் அதிசயப்படவைக்கிறது. மற்ற காகங்கள் இதை ஒதுக்குவது தான் வேதனையளிக்கிறது

2 comments:

  1. உண்மை தான் வெள்ளைக் காக்கா பறக்குது அடிக்கடி நல்ல தகவல் அளிப்பதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நண்பரே,

    வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து எனக்கு ஊக்கம் தாருங்கள்.

    -சின்ன சாத்தன்

    ReplyDelete