Damselfly தேவதை தும்பி
அழகாக இலையில்
அமர்ந்திருக்கும் இந்த
தும்பி Damselfly
என ஆங்கிலத்தில் பெயர். தமிழில் தெரிந்தவர்கள் சொல்லலாம்.இதைப்படம் பிடிப்பது கடினம். ஏனெனில் உருவம் அப்படி. தும்பிக்கு(Dragonfly)கண்கள் ஒட்டுமொத்தமாக இருக்கும். இதற்கு தனித்தனியாக இருக்கும்.
அமர்ந்த நிலையில் இறக்கைகள் வாலை ஒட்டியிருக்கும். இவை கொசு, பறக்கும் சிறு பூச்சிகள் என உண்ணும். பெண்தும்பி நீர் அல்லது மூழ்கிய தாவரங்களில் முட்டையிடும். முட்டை பொரிந்து நிம்ஸ் (Nymphs) வெளிவரும். இவை கொசு லார்வாக்களை உண்ணும். பல சட்டை உரிதலுக்குப்பின் இந்த அழகு தேவதை வெளிப்படுவாள்.
No comments:
Post a Comment