தேவாரத்தில் செங்கால் நாரை
Painted Stork
(Mycteria leucocephala)
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை
சேருந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல்
மாலைப்புரிபுன் சடையீரே -சுந்தரர், ஏழாம் திருமுறை
செங்கால் நாரை (Painted Stork) சங்க காலத்திலேயே தொலைநோக்கி இல்லாமல் பார்த்து, ரசித்து, பக்தி மற்றும் சங்க இலக்கியங்களில் நமது புலவர்கள் பாடியுள்ளனர்.
சுந்தரமூர்த்திசுவாமிகள் 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருவாரூர் பதிகத்தில் செங்கால் நாரையைப்பதிவு செய்துள்ளார்.
இந்தப்பறவைகள் உணவைத்தேடி உள்வலசை போகும். தமிழ் நாளிதழ்கள் இப்பறவையை வெளிநாட்டுப்பறவையென எழுதுவதை திருத்திக்கொள்ளவேண்டும்.
இப்பறவைகளை நீர்நிலைகளில் காணலாம். இதன் உணவு மீன், நண்டு,தவளை,புழுப்பூச்சிகள் ஆகும். இதற்கு வேறு பெயர்களும் உண்டு. அவைகளாவன;- செவ்வரி நாரை, மஞ்சள்மூக்கு நாரை. பதிகத்தின் பொருள்;- தினைத்தாள் போல மெல்லிய நீண்ட கால்களை உடைய செங்கால் நாரைகள் பறந்து போய் திருவாரூரை விரும்பிச்சேரும். திருவாரூரில் பொன்நிறக்கொன்றை மாலையை தன் சடையில் சூடிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
நான் இவற்றை திருவாரூரில் நான் படிக்கும் கல்லூரியில் (மருத்துவக்கல்லூரி) விடுதிக்கருகில் அடிக்கடி பார்க்கிறேன்..........
ReplyDeleteவலைப்பூ வருகையாளரே,
ReplyDeleteஇது நமது பூர்விகப்பறவை. திருவாரூர் சுற்றுப்புறங்களில் நிறைய இப்பறவைகளைக்கண்டு ரசிக்கலாம். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி.
-சின்ன சாத்தன்