ஈசல்
மழை
பெய்து முடிந்தது; ஈசல்கள் பறந்து வந்தன
மஞ்சள்
கிரணங்கள் சாய்வாக விழுந்து மயக்கின
மாலை
கவியும் முன்னம் ஈசல் வாழ்வு முடியும்
யாவரையும்
மரணம் தழுவப்போவது நிச்சயம்
அதில்
யாருக்காவது மாறுபட்ட கருத்துண்டா?
அப்போதுதான்
இறகு விரித்த ஈசல்களுக்கு ஆனந்தம்
மஞ்சள்
வெய்யிலில் மயங்கிச் சிறகடித்துத் திரியும்
விளக்கேற்றியதும்
அதைச்சுற்றிக் கும்மாளமிடும்
வாலிபத்தில்
மது, மாது, மாளிகை, மயக்கம்
இரவுக்குள்
இறகு உதிர்ந்துத் தரையில் புரளும்
முதுமையில்
தெம்பிழந்து மரணப்படுக்கை வீழம்
ஈசல்களுக்குப்
பிறந்த அன்றே மரணம் நிச்சயம்
நமக்கோ
ஒவ்வொரு உறுப்பாக மந்தமாகி
நெய்தீர்ந்து
மெல்ல அவியும் விளக்குப் போல
அவிந்து
போவோம். வாழ்ந்ததில் நிம்மதியுண்டோ?
ஏன்
இப்படி? ஈசல் வாழ்வு வாழவா பூமி வந்தோம்!
சின்னசாத்தன் எழுதிய தியானக்கவிதை நூலிலிருந்து............
No comments:
Post a Comment