கல் கெளதாரி
Chestnut-bellied Sandgrouse
(Pterocles
exustus)
இந்தப்பறவை முட்காடுகளிலும், கல்லாங்காடுகளிலும் காணலாம். வரண்ட பருவத்தில் மாலை நேரங்களில் நீர் அருந்த நீர்நிலைகளுக்கு வரும். நம் நாட்டுப்பறவையான இவை கூட்டமாக வாழும். கொஞ்சமே குழிவான தரையில் தான் கூடு வைக்கும்.
அதில் 2 (அ) 3 சின்னக்கற்களை வைக்கும். இந்தக்கூட்டை பெட்டை
பறவையிடம் காட்டி, தலையை ஆட்டும் ஆமோதிப்பைப்பெறும். உடனே
தன் எச்சத்தை முட்டை வடிவில் ஒரு வித நாற்றத்துடன் அந்தக்கூட்டினுள் இடும். பருந்து போன்ற
பறவைகள் முட்டை போன்ற எச்சத்தை உடைத்திருக்கிறதா அல்லது கலைத்திருக்கிறதா என சில நாட்களுக்குப்பிறகு பார்த்து, எச்சம் கலைக்கப்படாமிலிருந்தால்
முட்டையிடத்தொடங்கும். பொதுவாக காலனியாக கூடு வைக்கும். இதைப்பார்ப்பது அரிதாய் இருக்கும். பார்ப்பதற்கு அழகு.
பறப்பதோ படுவேகம். இப்பறவை கூட்டில் அடைகாப்பதைப்பார்க்கிறீர்கள். இந்த மாதிரி
பறவைகளைபற்றிய பல ஆச்சர்யத்தகவல்கள் மற்றும் முன்னூறு வண்ணப் படங்களுடன் வெளிவந்த நூல் பற்றி www.nestingbook.webs.com வலைப்பூவுக்குச்சென்று தெரிந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment