ஆலா
Gull-Billed Tern
(Gelochelidon nilotica)
கோவை சிங்கை மற்றும் சுலூர் குளத்தில் ஆலாவை இந்த வலசைப்பருவத்தில் பார்த்தேன். சுலூர் குளத்தில் ஆலாவை நெருக்கத்தில் நிழற்ப்படம் எடுக்கமுடிந்தது. இது பருத்த அலகு ஆலா. மேற்கு வங்கம், பாங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து
வலசை வந்தது. காகத்தின் பரிமாணம். நிறம் வெள்ளையும் சாம்பலும் கலந்தது.தலை கருப்பு. கடற்காகம் (Gull) போல பருத்த அலகு. இதன் கால்களும், பருத்த அலகும் கருப்பு. குளிர் பருவத்தில் கண்ணைச்சுற்றி கருப்பு திட்டு. தனியாக அல்லது சிறு குழுவாக நீர் மேல் பறந்து, திடீரென நீர்ப்பரப்பில்
பாய்ந்து நீர்ப்பூச்சி/ நண்டு பிடிக்கும். கடற்கரைப்பறவையானாலும் உள்நாட்டு நீர்நிலைகளுக்கும்
வலசையின் போது வருவதுண்டு.
No comments:
Post a Comment