வலசை(Migration)
கொசு உள்ளான்
Little Stint
(Calidris minuta)
Little Stint |
ஐரோப்பா மற்றும் சைபிரியாவிலிருந்து
கோவை, சூலூருக்கு வருகை புரிந்த கொசு உள்ளான் குழுவே வருக! சனிக்கிழமை 13.10.2012
அன்று அதிகாலை நானும் நண்பர் விஜயகுமாரும் ராமச்சந்திரா குளத்தில் வரவேற்றோம். சிங்கைக்குளத்தில்
முன்பே பார்த்தேன். ஆனால் வரவேற்புக்கு தொலைவில் குழு இருந்தன. நிழற்ப்படத்துக்கு நிற்கவுமில்லை. இத்தனை சிறியவர்கள் எப்படித்தான் ஐயாயிரம் மைல்களுக்கு
மேல் பறந்து வருகிறார்களோ! வலசை ஒரு புதிர்.
நீர்கரை ஓரங்களில் நடந்தும்,
ஓடியும், நத்தை, நீர்ப்பூச்சி, சங்குப்பூச்சி உண்ணும். குழு நீர் பரப்பின் மீது துரிதமாகவும், நெருக்கமாகவும், வளைந்து, ஒன்றுசேர்ந்து திரும்பிப்பறக்கையில்
சூரியஒளியில் சின்னப்பறவைகளின் அடிப்பாகம் பளீரிடும்,அழகைச்சொல்ல வார்தைகள் இல்லை. ரஷ்யாவில்
9.8.77 –ல் காலில் வளையமிட்டது தமிழ்நாடு கோடியக்கரைக்கரையில் 25.8.90
அன்று காணக்கிடைத்தது.
No comments:
Post a Comment