Thursday, September 27, 2012

பயணம்


சந்திரனும் சூரியனும்
கலம்காரி ஓவியம் துகிலில்


பயணம்
(Travel)







     பயணம் எனக்குப் பிடித்தமானது. பல முகங்கள், பல மொழிகள், பல மரங்கள், பலவித நிலஅமைவு, பல உணவுகள்  சிற்பங்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள், பறவைகள், விலங்குகள், நதி, ஏரி, கடல், வானம் என இயற்கை தான் என்னைக்கொள்ளை கொள்ளும். மனிதன் உருவாக்கிய இயந்திரத்தை விட என்னை பரவசத்துக்குள் தள்ளுவது இயற்கை தான். இந்த இயற்கையை சீரழிப்பவன் மனிதன் ஒருவன் மட்டுமே! அதே மனிதனின் கை கலைப்பொருட்களை செய்யும் போது தியானத்தில் அதுவும் இறைவனுக்கு அருகில் உள்ளான். மனிதன் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும். கிரானைட் போல பல கனிமங்களை வரைமுறையற்று திருடுவது, சேலம் மூக்கனேரியில் வேதியல் வினாயகரைக்கரைப்பது, விளைநிலத்தில் பிளாட் போடுவது, சோலைகளைக்கொழுத்துவது என பொறுப்பற்ற செயலில் ஈடுபடுபவன் மனிதனல்ல. தோழா! பின்விளைவுகள் படு பயங்கரமாக இருக்கும். விலங்கை அனுமானிக்க முடியும், ஆனால் மனிதன் ஒருவனைத்தான் எதில் சேர்த்துவது என்று தெரியவில்லை. சென்ற சனி (22.09.12) அன்று நானும் நண்பர் பாஸ்கரும் சென்னை மாமல்லபுரம், முட்டுக்காடுக்கருகில் தக்ஷின் சித்ரா என்ற கண்காட்சியில் தென்னக கலாசாரப்பதிவுகளைக் கண்டு பரவசப்பட்டோம். தியான மனிதன் களிமண்ணில் உருவாக்கிய கலைப்பொருள், சிற்பம், கலம்காரி ஓவியம் பார்த்து ரசியுங்கள்.பூமி அழிவு பட்டால் எதைப்பார்த்து ரசிப்பது? மனிதன் பூமியைப்பண் படுத்திடல் வேண்டும். பணத்துக்காக பூமியை நாசம் செய்திடல் கூடாது. இயற்கை அழிந்த பின் பணத்தை சாப்பிடமுடியாது. நினைவில் வைப்பீராக!.


No comments:

Post a Comment