Feeding to Chicks
நல்ல
காகம் தனது
குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுதல்
(கண்ணுபடப்போகுதய்யா!)
நல்ல
காகம் என்று ஏன் நாமம் சூட்டினர். நம் ஊரைச்சுத்தம் செய்வதால் நம்
முன்னோர் இப்படி பெயர் வைத்தனர். இவனை மாதிரி புத்திசாலி,
பறவைகளில் இல்லை எனலாம். இவன் கூடு வைக்க இப்போது சாலையோர மரங்களில்லை. நாம் சொகுசாக காரில்
பிரயாணிக்க வெட்டி விட்டோம். இவனை மாதிரி குறும்பு செய்ய பறவைகளில்ஆளில்லை.
பேட்டை ரவுடி. பறவை கூடு காலனிக்குள்ளே பறந்து
ரவுடித்தனம் செய்வான். ஆனால் இதன் கூட்டுப்பக்கம் ஆட்கள் நாடமுடியாது.
வீட்டுமுன்புற வேம்பு மரத்தில் கூடு இருந்த போது, பக்கத்து வீட்டு அம்மாள் அதிகாலை கோலம் போடும் போது புட்டத்தை அலகால் பதம்
பார்த்து விட்டது.என் மனைவி தலையில் ரோஜாப்பூ சூடிச்சென்றபோது
அதை வழிப்பறி செய்த சில்மிஷத்தை என்னவென்று சொல்வேன்? பருந்து,
கழுகு, குயில், ஆந்தை என
எந்தப்பறவையையும் சகட்டுமேனிக்கு துரத்தும் பராக்கிரமத்தை எப்படிச்சொல்வது?
மாடு, ஆடு போன்ற கால்நடை மேல் ஓசிப்பயணம் இவனுக்குப்பிடிக்கும்.
மழைநீர் வடிகுழாயில் பிஸ்கட் ஒளித்து வைத்து பிறகு உண்ணும் புத்திக்கூர்மை,
குழாயில் ஒழுகும் நீரை குழாயில் அமர்ந்தவாறே லாவகமாக பருகும் அழகும்,
முக்காலியில் இருந்த அலுமினிய பாத்திரத்தில் நீர் எட்டாத போது,
தன் எடையால் அசைத்து நீர் பருகிய அறிவும் என காகத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
எனது நூல் ‘Diary
on the nesting behavior of Indian Birds” (pl.visit: www.nestingbook.webs.com) வெளியிடும்
போது இந்த மாதிரி படம் எடுக்க எனது இல்ல ‘சிட் அவுட்’ டிலிருந்து முயன்றும் முடியாது
போனது. எனது மொட்டையடித்த மண்டை காகத்திடம்இரண்டு கொட்டு வாங்கியது தான் மிச்சம். இப்போது எனது ஆஸ்தான
போட்டோகிராபர் நண்பர் N. ராதாகிருஷ்ணன் இப்படி படம் எடுத்து மெச்ச வைத்து விட்டார்.
அவரை மனமார பாராட்டலாமே, தோழர்களே!
ivvalavu arivulla kagathai parambarai parambarayaga kuilgal emaatri adhan kootinul muttai vaithu, kagathaye valarka seidhu, adharketravaru muttai niram, vadivam matrum porithal neram mudhaliavatrai thannul develop seidhu ulladhu. Idharku badhil, thannudaya gene'il koodu katti kunju porippadhai en develop seiyavillai? Darwin theory padi pala aairamaandugal idharkana matram seidhurukkalam
ReplyDeletekagathai pattri arumaiyana varigal.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete