அரிய காட்சி
No space for
nesting to House Sparrows
சிட்டுக்குருவிகள் கூடு வைக்க இடமில்லை
சிட்டுக்குருவி
காணாமல் போனதற்குக்காரணம் காங்கிரிட் ஜங்கிள் தான் காரணம். அது இனப்பெருக்கம் செய்ய
ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள், வீட்டு பொந்துகள், விளக்கு தடுப்பான்கள், குயவன் ஓட்டு
வீடுகள் இப்போது இல்லை. கிராமத்தில் கூட காங்கிரிட் வீடுகள். குஞ்சுகளுக்கு புழுப்பிடித்துக்கொடுக்க
நகரத்தில் மண்ணில்லை. வீட்டைச்சுற்றி சிமெண்ட், தெருவெல்லாம் தார். என்ன செய்யும் அந்த
சிட்டு? பொறுக்க தானியமாவது இருக்கா? நான் ‘Diary on the nesting behavior of
Indian Birds” வெளியிடும் போது ஊரெல்லாம் தேடியும் கூடு கிடைக்கவில்லை.
தூய மிக்கேல் பள்ளி மாணவர் சிலர் துப்புக்கொடுக்க, அவர்களோடு ஆசிரியர் ஜார்ஜ் சென்று,
ஒரு வீட்டின் கொல்லைப்புற வளை சிமெண்ட் கூரையின் அடியில் இருந்த குருவிக்கூட்டின் படம்
பிடித்து வந்தார். அதுவும் மூன்று வருஷங்களுக்கு முன்னமே இந்த நிலைமை என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.
இப்போது
நணபர் எனது ஆஸ்தான போட்டோகிராபர் N. ராதாகிருஷ்ணன் ஒரு கல்யாணமண்டபத்தின் சாண்ட்லியர்
விளக்கில் குருவி கூடுவைத்திருந்ததை படம் பிடித்துள்ளார். சாண்ட்லியருக்கு நேரே மாப்பிள்ளை
அமர்ந்திருந்தாராம். நல்ல வேளை தலைமீது 'ஷிட்' அடித்து ஆசிர்வாதம் பண்ணவில்லை.
2004-ல்நான், நண்பர் ராதாவுடன் தில்லி ரயில் நிலையம் நுளைந்த
போது, என்னை ஒரு மைனா 'ஷிட்' அடித்து வெல்கம் செய்தது. இதை பொது நூலகங்களில் உள்ள எனது
இமய வலம் நூலில் படிக்கலாம்.
No comments:
Post a Comment