Monday, April 29, 2013


Super click


Dr. லிம்அலியின்          
                                       ஏக்கம்
Super click
                இந்தத்தருணம் எப்படி உறைந்துள்ளது பார்த்தீரா? காணக்கண்கோடிவேண்டும் என கிருஷ்ணபரமாத்மாவிடம் கேட்டுப்பெறலாம். நான் இதை கோமேதகப்பறவை எனப்பேயரிட்டுள்ளேன். என் பறவை குருநாதர் Dr. ரத்னம் இதற்கு ஊதா தேன்சிட்டு எனத்தமிழில் பறவைப்பெயர்கள்நூலில் குறிப்பிட்டுள்ளார். இது லோட்டன் ஊதா தேன்சிட்டு(Loten’s Sunbird). இதன் அலகு ஊதா தேன்சிட்டுவின் அலகை விட நீளமாகவும், வளைந்தும் உள்ளது.இது ஒன்று தான் நமக்குத் தடயம். இதன் குழாய் போன்ற நாக்கு மலரின் அடிவரை போய் தேன் எடுக்கிறது. சிலசமயம் பூவின் அடிப்பாகத்தின் வெளிபுறமே அலகால் ஓட்டையிட்டு, தேனை உறிஞ்சிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். இயற்கை இந்தப்பறவை தேனுறிஞ்சுவதற்காகவே அலகை இப்படி வடிவமைத்துக்கொடுத்துள்ளது. பறவையியல் பிதாமகர் Dr.சலிம் அலிக்குப் மிகப்பிடித்தமான பறவை இதன் இனமான Purple Sunbird. அவர் மரணப்படுக்கையில் படுத்திருந்த போது வலசைப்பருவம் முடியம் தருவாயில் வலசை வந்த பறவைகள் தங்கள் தேசங்களுக்குத்திரும்பிக்கொண்டிருந்தன.அவருக்கு மரணிக்கவிருப்பமில்லை. இன்னும் பறவையியலில் சாதிக்க வேண்டியதுள்ளதே என ஏக்கம் அவரை பற்றியிருந்தது. அடுத்த வலசைப்பருவத்தில் தான் இருந்து பறவைகளை ரசிக்கமுடியாதே என ஏக்கமும் வருத்தமும் மீதூர, படுக்கையிலிருந்து ஜன்னல் வழியாக சிறகடித்துத்திரும்பிப்போகும் பறவைகளைப்பார்த்தார். இவருக்கு அடுத்தபிறவியிருந்தால் பறவை நேசராகத்தான் இருப்பார்.

Photo Courtesy: N. Radhakrishnan
Source: Fall of Sparrow - Dr. Salim Ali 

3 comments:

  1. சில வகை பூக்கள் மகரந்த சேர்க்கைக்கு இந்த தேன் சிட்டையே நம்பி இருக்கின்றன .
    அந்த தேன் சிட்டு இல்லாவிடில் அவ்வகை தாவரங்கள் அழியக்கூடும் .

    ReplyDelete
    Replies
    1. உபயோகமான தகவல். இதை வலைப்பூ நேசர்கள் படித்து பூமிப்பூவை பாதுகாக்க வேண்டும்.

      -சின்ன சாத்தன்.

      Delete
  2. ஒரு இக்கட்டில் இருக்கும்போது கடவுள் நம்மை கைவிட்டால் நமக்கு எப்படி இருக்குமோ அவ்வாறு மனிதனை அறிவுடையவனாகப் படைத்து இவ்வுலகை நம் பொறுப்பில் விட்டால் பூமியின் அத்தனை அழிவுகளை நாம் செய்து விட்டு நம்மை நம்பியுள்ள உயிர்களை நாம் கைவிட்டுவிட்டோம். அறிவுடை மனிதன் இப்புவியின் சாபக்கேடு. வாயில்லா ஜீவன்களும் மரம் செடிகளும் நாம் சுகபோகத்துடன் வாழ்வதற்கே என்ற இறுமாப்புடன் இயற்கையை மனிதன் அழிக்கிறான். ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது என்று மனிதன் அறிந்து விட்டால் பின்னர் அழிவை செய்ய மனிதன் விரும்ப மாட்டான்.

    ReplyDelete