மழை மரம்-RAIN TREE
(Enterolobium saman)
இந்த மரத்தில் இளைப்பாற வரும் பறவைகள்
காகம்
கொண்டலாத்தி
அண்டங்காகம்
சிலம்பன்
கொண்டைக்குருவி
வால்காகம்
குயில்
தேன்சிட்டு
கரிச்சான்
மைனா
செண்பகம்
மீன்கொத்தி
வல்லூறு
ஆமாம். நானும் இந்த மழை மரம்
வந்து இளைப்பாறுவேன்.
இந்த மரம் பிழைக்குமா? என ஆதங்கத்தோடு
இருந்தேன். ஏனெனில் பத்தடியில் இருக்கும் போது நான்கடி உயரத்தில் பாதியாகப்பிளந்த நிலையில்
இருந்தது. பெரும் காற்று இதை ‘மலுக்’கென முறித்திருக்கும். வளைந்து வேறு இருந்தது.
நான் வளைந்த இடத்தில் முட்டுக்கொடுத்து, ஒரு மூங்கிலை வைத்தேன். பாதி பிளந்த இடத்தில்
சாணி வைத்து ஒரு தாம்புக்கயிற்றால் கட்டினேன். மரம் ஒரு அடிக்குமேல் தடிமன் இருக்கும்.
இது நடந்து ஐந்து வருஷத்துக்கு மேல் இருக்கும். வளர வளர இது தண்டு பெரியதாகி கணமாக
தன் வளைந்த கிளையையும், பிளந்த அடித்தண்டையும் மேலும் பிளக்காமல் தாக்குப்பிடிக்குமா?சரிந்து
விடுமா? சிக்கடாக்கள் இதன் இலைகளை விரும்பி உண்ணுவதால் இதில்அதிக அளவில் வந்து தங்க
அதன் கழிவுகள்(discharge)மரத்துக்கடியில் ஈரப்படுத்த இதற்கு மழைமரம் எனப்பெயர் வந்தது.
இது பிரேசிலில் இருந்து வந்தது என S.G. Neginhal, IFS (Retd) சொல்கிறார்.இதன் குழுமையான நிழலில் ஒரு படையே முகாமிடலாம். எப்போதும் ஊனமான உயிர் மேல் நமக்குப்பிரியமதிகம். அது நம்மை அறியாமலே வரும். அது ஏன்? மனிதன் எப்படி தன்னை உடல் திறனுக்கேற்றவாறு தகவமைத்துக்கொள்கிறானோ அது போல இந்த மரம் 50 வருஷம் கூடவாழ தன்னை சரி செய்துகொண்டது. இதோ! அந்த ஜீவன்! தன்னை பூமியில் நிலை நிறுத்திக்கொண்டு சிக்கடா, காகக்கூடு, சிலம்பன், வல்லூறு,காகம், அண்டங்காகம், தேன்சிட்டு, வால்காகம், மீன்கொத்தி,குயில், கொண்டைக்குருவி, செண்பகம், மைனா, கொண்டலாத்தி, கரிச்சான்,பலவிதப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள் என அனைத்துக்கும் மடிகொடுத்து இந்த வேனில் காலத்தில் நிழலில் இளைப்பாற்றுகிறது.ஊனப்பட்டும் அதன் விருந்தோம்பல் சோடை போகவில்லை. மனிதரே! உமக்காக வாழ்ந்தாலும், இந்த மழை மரம் போல் பலருக்கும் உபயோகமாக வாழ வேண்டும். வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும்.

நான் பீளமேட்டிலிருக்கும் ஒரு கல்லூரிக்கு கடந்த வாரம் சென்றிருந்தேன் . பழைய கல்லூரி . அதனால் பெரிய மரங்கள் இருந்தன. கண்டிப்பாக வெளி வெப்பத்தை விட 2-3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. மரங்களின் தேவை அப்பொழுது அறிந்தேன். பீளமேடு மற்றும் பிற இடங்களில் சாலைகளில் குறைந்த பட்சம் உயர்ந்து வளருகின்ற அசோக மரங்களை கல்லுரி மாணவர்கள் மூலம் வளர்க்க செய்யலாம். ஏனென்றால் இல்லாத மின்சாரத்திற்கு அலப்பல் செய்யும் மின்வாரிய அராஜகங்களுக்கு வேறு மரங்கள் கண் பட்டாலே போதும். அதையும் வெட்டி விடுவார்கள்.
ReplyDeleteசரியாக்கணித்தீர் நண்பரே!
Deleteநான் வளர்த்த ஏழு வேப்பமரங்கள் தான் இந்த வெப்பம் பொங்கும் வேனிலில் குளிர் பதனப்பெட்டிகள். நான் இரவில் வியர்வையுடன் கூடிய புழுக்கத்தை உணரவில்லை.