கவிஞர்களே! இதோ அந்தமேடையில்லாப்பாடகன்!
வானம்பாடி
Oriental Sky Lark
திருவாலங்காடு
அல்லிக்குளம் மனதை அள்ளிச்சென்றது.அங்கிருந்து சென்னை ரயிலில் செல்லச்செல்ல
நகர்புற சாக்கடைகள் தென்படும் ஏரிகளில் கலப்பதால், ஆகாயத்தாமரை
பரவி அல்லி மலர்களை தள்ளி காணாமல் அடித்து விட்டன. ஏனெனில் ஆகாயத்தாமரை
சாக்கடை நீரில் ஊட்டமாக வளரும். அல்லி, தாமரை மலர்களுக்கு நன்னீரும், சேறும் தேவை. இப்படித்தான் என் சூலூர் செங்குளம் தாழம்பூ மணத்தில் தாமரைகள் மலர்ந்திருந்தன. மனிதனின் ரசனை இப்போது பணத்திலிருக்கிறது. நீர் குழாயில்
தரப்போய் குளம், ஏரி முக்கியத்துவம் மறைந்து, தற்போது நீர் நிலைகள் பெரியகுப்பைத்தொட்டியாகி விட்டன.
அரக்கோணத்தில் உள்ள ரயிலடி ஒட்டிய பேட்டிமூர்(ஒரு
ஆங்கிலோஇந்தியரின் பெயர்.அப்போதெல்லாம் இவர்கள் அதிகம் வசித்த
ஊர்) ஏரியில் பறவை நோக்கலில் லயித்திருந்த போது ஒருவர்
‘இந்த ஏரியை எப்போது கண்டம் பண்ணப்போகிறார்கள்?’ என்று வினவினார்.
இந்த ஏரியில் பிளாட் போட நினைக்கிறாரோ! நிலத்தடிநீர்,
காற்றில் குளிர்வு, பறவைகள் தரும் பரவசம்,
நீரை நம்பியிருக்கும் மற்ற ஜிவராசிகள், வேண்டாமா?
சுற்றிலும் மரங்களுடன் நடைபாதை அமைத்து ஓடலாமே! ஆரோக்யம் கிடைக்குமே! எனக்கென்னவோ பணத்தை விட அல்லி மலர்களும்,
அல்லிக்குளமும், இந்த வானம்பாடிக்குருவியும் அதிமுக்கியமாகப்படுகிறது.
அன்று அந்த அல்லிக்குளத்தை ஒரு காதலியைப்பிரிவதைப்போல பிரியமனமில்லாமல்
பிரிந்தேன்.
No comments:
Post a Comment