சிகப்புத்தலை நுண்ணிச்சிறை
Rufousfronted wren- warbler
(Prinia buchanani)
அரக்கோணத்தில், அப்போது ரயில்வேயில்
பணி செய்தவர் ஆங்கிலோஇந்தியர்கள். அவர்கள் ஆங்கிலமும்,
ஆங்கிலேயர்கள் போல் நடை, உடை பாவனையும் என்னைக்கவரும்.
இப்போது ஓரிருவர் மட்டுமே தட்டுப்படுகின்றனர். ஆங்கிலேயர் தொப்பி, கோட்டு, சூட்டு,
கவுன், ப்ராக், ஆங்கிலம்
எங்கு போயிற்று? இறைவன் காட்சிகளை மாற்றி, மாற்றி அமைக்கிறார். ஒவ்வொரு நாள் சூர்ய அஸ்தமனம் போல…..
திருவாலங்காடு அல்லிக்குளத்தில் மனதைப்பறிகொடுத்து, ரயில்
தண்டவாளம் தாண்டி அப்புறம் போனால் நான்கடி உயரம் வளர்ந்த நீரில் நிற்கும் புற்களில்
ஒரு ஜோடி சிட்டுகளிள் ‘டூயட்’. ஆஹா!
அருமை! தழும்பாத நீர் பரப்பு, வட்ட, வட்ட அல்லி மிதக்கும் இலைகள் பின்புலமாகக்கொண்டு
சந்தோஷ காதல் பாட்டு. கதிர்குருவி (அ)
நுண்ணிச்சிறைகளை இனம் காண்பது மிகக்கடினமானது. தலை பழுப்புசிகப்பு, வெள்ளைப்புருவம், வால் ஓரம் வெள்ளை விளிம்பு, அடிப்பகதி வெண்மை.
அத்தோடு கண்ட இடம் முக்கியம். முட்காட்டின் இடையிருக்கும்
நீரில் தடித்த நீண்டபுற்கள். மேலும் ஜோடியாக இருந்தது.
இவை உன்னை அடையாளம் காட்டிக்கொடுத்தது என் தேவதையே! ஆந்திராவைத்தாண்டி எம் தமிழ் நாட்டு எல்லையோரம் என்னைக்காண வந்தது அதிசயம்! வரலாறு காணா புதுமை! இதை என் குறிப்பேடில் எழுதி வைப்பேன்.
looks like ashy wren warbler
ReplyDeletewhat is the distinction between aww and rfww
DeleteDear friend,
Rufousfronted wren Warbler have rufous coloured crown and Ashy wren Warbler ash colour.
rufous coloured crown not clear in the picture!
Deleteyes- I try to post another picture.
Delete