Monday, February 25, 2013

 Asian Pied Starling- Rare Bird in Tamil Nadu



 ஏரி, குளங்களை நீ எப்படி நாறடிச்சாலும்
                       நாஙக
 வாழ்ந்து காட்டுவம்டா!

Pond Heorn's Rafts to catch prey are Human used and thrown tyre and foot wear sole into the Pond
பொரி மைனா                 (top picture)                                          
Asian Pied Starling (Sturnus contra)

இந்த வகை மைனாவை நான் பல வருடங்களுக்கு முன்பு புது தில்லியில் சுற்றுலாப்பயணிகள் கூடும் இடத்தின் புல்வெளியில் பார்த்தேன். இந்த மைனா நிழற்படம் அரக்கோணம் ஏரியில் எடுத்தது. சலிம் அலி நுலில் இது ஆந்திராவைத்தாண்டாது எனக்கண்டேன். ஆனால் என்னைப்பார்க்க ஆந்திர எல்லையைக்கடந்து ஒரு ஜோடி பொரி மைனா மட்டும் அரக்கோணம் வந்தது அதிசயம் தான். இது அவர் சொல்வது போல் கழிவு கடாசப்படும் ஏரியை விரும்பி வருவது இன்னும் ஆச்சர்யம்.இது வானம்பாடியிடம் அபகரித்த பாடலைப்பாடுவது உன்னத ஆச்சர்யம். அடுத்த முறை பாடச்சொல்லி நான் ஒன்ஸ் மோர்சொல்லவேண்டும். இதுவரை பார்க்காதவர் இதன் அழகில் மயங்கலாமே!

4 comments:

  1. அருமை. இயற்கையை நேசியுங்கள். பறவைகள் இயற்கை அன்னையின் உரைகல். ஒரு பறவையைப்பற்றி இரண்டு வருடங்களுக்கு முன் நான் எழுதிய சிறுகதை. இப்போதுதான் ப்ளாக்கில் வெளியிட்டேன்.www.sornamithran.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. படைப்பாளரே,

      தங்களை பாராட்டுகிறேன். தங்கள் சிறுகதையைப்படிப்பேன்.

      -சின்ன சாத்தன்

      Delete
  2. சமீபத்தில் ஆந்திராவின் புகழ்பெற்ற புத்த தலமான அமராவதியில், சிவன் கோயிலருகே ஒரு மரத்தின்மீது இப்பறவையைப் பார்த்தேன். ”பொரி மைனா”வின் பெயர்க்காரணம் என்னவோ?.

    ReplyDelete
  3. அன்பரே,

    உடம்பின் மீது கருப்பு, வெள்ளை நிறத்திட்டுகள் இருந்தால் பறவையை பொரி நிறம் என்பர். இந்த மைனாவில் அந்த நிறங்கள் உள்ளன.

    -சின்ன சாத்தன்.

    ReplyDelete