இயற்கை அழகை விஞ்ச முடியுமா!
இயற்கை
போற்றி!
மலர்களின்
நிறம் இயற்கையின் மொழியோ!
மகரந்தம்
தங்கத் துகள்களோ! வாசனை மொளனமோ!
வானில்
நிலாவைத்தேடி ஓடிய கண்கள்
நக்ஷ்சத்திரங்களிருந்தும்
நிலாவைத் தேடக்காரணமென்ன?
கண்களே!கண்களே!
இமைக்க மறப்பீரோ!
மண்ணில்
கொஞ்சமே எடுத்து நிறையவே கொடுத்து
மரம்
மாதிரி வாழும் மனிதமெங்கே?
தேடு!தேடு! கண்களே!
தேடு!தேடு! கண்களே!
அடேங்கப்பா! இந்த நீர்காகங்களின் மாநாட்டுக்கு வாழ்த்துக்கவிதை நீங்கள் பாடுங்களேன்!
No comments:
Post a Comment