தோட்டிப்பறவை
Real Scavenger
நல்ல
காகங்கள் நம் சேரி உட்பட கிராமம்,
நகர் என பிரித்துப்பார்க்காமல் எந்த இடத்தையும் தன்னால் முடிந்த அளவுக்கு
சுத்தம் செய்கிறது. செத்த எலியிலிருந்து நாம் சிந்திய சளி வரை
பாகுபாடு இல்லாமல் உண்டு சுத்தம் செய்கிறது. உலகத்தில் காகயினங்கள்
இல்லை என்றால் அசுத்தம் நிலவும், இல்லையா? இதற்கு, மிக தந்திரம், அறிவு,
ஒற்றுமை, எச்சரிக்கை, சூழலுக்கு
ஏற்ப தகவமைதல், உணவை தேர்ந்தெடுக்காமை, தைரியம், முயற்சி என பல குணங்கள் மற்ற பறவைகளைக்காட்டிலும்
அதிகம். மனிதனை ஒட்டியே தன் வாழ்வை அமைத்துக்கொண்டது.
நாமும் காகம் முதாதையர் என நினைத்து, ஆடி,
புரட்டாசி, தை அமாவாசைகளில் கா…கா.. என காகம் போல கரைந்து படையல் சோற்றை உண்ணக்கூப்பிடுகிறோம்.
வயதானதும் காகம் நம் கண்ணுக்குத்தெரியாமல் ஊருக்கருகாமைக்காட்டுக்குச்சென்று
இறந்து விடுகிறது. அதை குள்ளநரி, நாய்,
காட்டுப்பூனை, கழுகு பொசுக்கி உண்டுவிடுகிறது.
காகங்கள் கூட எண்ணிக்கை குறைவதைப் பார்க்க முடிகிறது. சாலையோர மரங்கள் அவைகளுக்கு உறைவிடம், கூடு அமைக்க இடம் தந்தது.
சாலைஅகல, மனித மனம் குறுக விபரிதத்தை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment