இயற்கை
அறிவு
இன்றைய மாணவர் எதெதோ படிக்கிறார்கள்.
ஆனால் இயற்கையைப்படிப்பதோ புரிந்து கொள்வதோ இல்லை. இதனால் இயற்கையைப்பேணிப்பாதுகாப்பதில்லை.
அதை பெருமளவில் சிதைக்கிறான். இயற்கையைக்கண்டு வியக்கவேண்டும். நீர், நிலம், ஆகாயம்,
நெருப்பு,காற்று என்ற பஞ்சபூதங்களில் இறைவன் இருக்கிறார். இவைகளை மாசுபடுத்தினால் உயிரினத்தில்,
(நாம் உட்பட) விஷம் ஏறும். பருவ மழைகள் அற்றுப்போனதற்குக்காரணம் மனிதன் தான். விலங்குள்
அல்ல. நீரின்றி உலகம் அமையாது. குழாயில் நீர் தருவிக்கப்போய் குளம், ஆறு, கடல் ஆகியவற்றை
மனிதன் மறந்தே விட்டான். அதில் சாக்கடை ஆறுகளை விடுகிறான். பள்ளி, கல்லூரிகளில், பொறியாளராக்கி பணம் சம்பாதிப்பது மட்டுமே நிகழ்கிறது.
அதனால் மலைக்கு வெடிவைத்து இயற்கைச்செல்வங்களை சூறையாடுகிறான். அளவுக்கு அதிகமாக வாகனங்களை
உற்பத்தி செய்து கார்பன் மானாக்சைடை ஏற்றி காற்றை நஞ்சாக்குகிறான். இயற்கை சீரழிந்தால்
மனிதனும் அழிவான். நான் தரும் இயற்கை காட்சியை ரசிப்பதோடு நில்லாமல் அருகாமை இயற்கைக்கு
சேவை செய்யுங்கள்.
No comments:
Post a Comment