நத்தை Pallikkarani Eco-system
Snail
மிருதுவான உடலைக் கொண்ட
உயிரினம் ஒரு அதிசயம்.
முதுகில் ஓட்டைச்சுமந்து கொண்டு பாவமாகவும், மெதுவாகவும்
ஊர்ந்து போய்க்கொண்டிருக்கும். ஆபத்து வந்தால் ஓட்டுக்குள் போய்
விடும்.நத்தைகளுக்கு ஈரப்பதமான நிலமும், சூழலும் வேண்டும்.இல்லையானால் ஓட்டுக்குள் நீண்ட உறக்கத்துக்குப்
போய் விடும்.ஓடு எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கும்,
வெய்யிலிலிருந்து தப்பிப்பதற்கும், சூழலோடு ஒன்றிப்போவதற்கும்
துணை செய்கிறது. ஓட்டில் கால்சியம் உள்ளது. அது வலது பக்கம் சுழற்றப்பட்டிருக்கும். நத்தை பெண்ணைத்தேட வேண்டியதில்லை.
பிறப்பு உறுப்புகள் இரண்டும் அதில் உள்ளது. ஆயிரக்கணக்கான
வகை நத்தைகள் உலகில் உண்டு. கடல் நத்தைகள் கில்ஸ்
(gills) கொண்டு சுவாசிக்கும். நிலத்தில் உள்ளவை
நுரையீரல் கொண்டு சுவாசிக்கும். நத்தைக்கு கண், வாய், நாக்கு,பாதம் உண்டு.
நிழற்படத்தில் காணப்படும் நத்தை சென்னை பள்ளிக்கரணையில் ஊர்ந்துகொண்டிருந்தது. இத்தகைய அருமையான சதுப்பு நிலமும்,
நீர் நிலையையும் சார்ந்த இடத்தைச்சுற்றி ஐடி கம்பெனிகள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை
நிறுவி தங்களுக்கு Eco system-த்தைப்பற்றி ஒன்றும் தெரியாது என
பறைசாட்டிக்கொண்டனரா அல்லது டாலர் கண்களை மறைத்து விட்டதா எனத்தெரியவில்லை.
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னம் பள்ளிக்கரணைச்சுற்றியுள்ள ஐடி கம்பெனிகளுக்கு
இ-மெயில் கொடுத்து மீந்துள்ள சதுப்புநீர்நிலையையாவது பேணிப்பாதுகாத்து
சுத்தப் படுத்தி நடைபாதை அமையுங்கள் என்றேன். பதிலில்லை.
அவர்கள் தான் சுற்றிலும் கண்ணாடி போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார்களே!
நிதி உள்ளது, மனமில்லை.
No comments:
Post a Comment