கண்ணுக்குள் வானவில்
எவ்வளவோ
பேருடன், எட்டு வயது குழந்தையும் கூட நிழற்படம் எடுக்கும் காலமிது. இப்போது காமராவே
எல்லாம் பார்த்துக்கொள்கிறது. ஷட்டர் வேகம், அப்ரச்சர் ஒளி அளவை, ஜும், தூரம் என ஆட்டோ
மோட் பார்த்துக்கொள்கிறது. குழந்தை க்ளிக் செய்தால் போதும். துள்ளியமான படங்கள் வந்து
கணணியில் விழும். அதை போட்டோ ஷாப்பில் சலவை செய்து பேஸ் புக்கில் இட்டு பெயர் வாங்கலாம்.
பறவை கண்காணிப்பு காமராவோடு செய்யக்கூடாது. பைனாகுலரில் பறவை பார்த்து அடையாளம் கண்டு
பரவசப்படவேண்டும். போட்டோகிராபியும், பேர்ட் வாட்ச்சும் சேர்ந்து செய்வது இரு குதிரையில்
சவாரி செய்வது போல் என, என் குருநாதர் டாக்டர் ரத்னம் சொல்வார். சென்ற செல்வாய் அன்று
வேலை நாளில் கூட பதினொரு நபர் பதினொரு காமராவுடன் கண்ணம்பாளையம் குளத்தில் சுற்றித்திரிந்து
நத்தை குத்தி நாரை கூட்டத்தை தொந்தரவுக்குள்ளாக்கியது வேதனையை அளிக்கிறது. பேர்ட் வாட்ச்
பிக்னிக்கோ,போட்டோகிராபி போட்டியோ அல்ல. Please, d’ont spoil Bird watch
charm. பறவையைத்துரத்தி நிழற்படம் எடுக்காதீர். நான் வெளியிட்டுள்ள படம் போல எடுத்து
பார்வைக்கு சுவை ஊட்டலாமே! பாராட்ட மனசு இருந்தால் எனது காமராவைப்பாராட்டுவீராக!
No comments:
Post a Comment