Tuesday, January 1, 2013


சுற்று சூழல்
 

Open Bill Stork                 
(Anastomus oscitans)
நத்தை குத்தி நாரை      

                
Common Sandpiper on shells
          



                  
                                                                       




நத்தை குத்தி நாரை, நாரை வகைகளில் வினோதமானது. இது சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளில் காணலாம். இதன் அலகு பாக்கு வெட்டி போல இருக்கும். இந்த விஷேச அமைப்பு நத்தைகளை உணவாகக் கொள்ளும் இந்தவகை நாரைக்கு உறுதுணையாக உள்ளது. நத்தை மேல் இருக்கும் ஓட்டினை உடைக்க உதவுகிறதுஎனலாம் என்ற Dr. சலீம் அலி, மேலும் இதைப் பற்றி அறிய வேண்டியிருக்கிறது என்கிறார். இந்த வகை நாரை தற்போது  கண்ணம்பாளையம் குளத்தில் சுமார் 60 நாரைகளை கடந்த சில மாதமாக காணமுடிகிறது. படத்தில் காணப்படும் நாரையின் அலகில் சிப்பி உள்ளது. கரையில் உளவும் உள்ளான் பறவையைச்சுற்றி ஏராளமான சிப்பிகளைக் காணலாம். இப்பறவைகள் அருகிலுள்ள சூலூர், பள்ளபாளையம், ஆச்சான் குளங்களில்இது போல காணக்கிடைக்கவில்லை. ஏன்? சிப்பி விளைச்சல் கண்ணம்பாளையம் குளம் போல மற்ற குளங்களில் இல்லை. சிப்பிகள் சாக்கடை நீர், அதிகம் கலந்தால் விளையாது. ஆனால் சாக்கடை நீர் கலந்து கொண்டுதான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாம் இயற்கைச் செல்வங்களை இழப்போம். PWD இதை கவனிக்குமா? கண்ணம்பாளையம் பஞ்சாயத்து தான் கவனிக்குமா? சிப்பிகள் விளையாவிட்டால் நத்தை குத்தி நாரைகள் தொடுவானில் மறையுமோ! Stills contributed: R. Vijayakumar

4 comments:

  1. நத்தை குத்தி நாரையைத் தவிர,இப்பக்கத்தில் உள்ள இன்னொரு பறவைதான் உள்ளானா? அதன் ஆங்கில பெயர் என்ன?

    ReplyDelete
  2. Dear Madem,

    Sorry. Now it is made good.-Sukumar

    ReplyDelete
  3. வணக்கம். தினமணியில் உங்களைப்பற்றிய கட்டுரை படித்தேன். அந்த நூலின் விலை என்ன? எவ்வாறு பெறுவது? உங்கள் இமெயில் அல்லது நம்பர் வெளியிடுங்கள் ஐயா!

    ReplyDelete
  4. Dear Blog Reader,

    Kindly visit my website: www.nestingbook.webs.com for details. However for immediate contact

    mob.no: 98421 06430 & e.mail: sukubird@gmail.com

    Sukumar-

    ReplyDelete